Friday, 21 August 2015

எரிபொருள் சேமிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் தொழில்நுட்பம்:

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், வாகனத்தின் செயல்திறன்  மற்றும் எரிபொருள் சிக்கனம், புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மேலும் நாம் சரியான முறையில் வாகனத்தை ஓட்டினால், பணத்தையும் மிச்சப்படுத்தலாம், சுற்றுச்சுழலையும் பாதுகாக்கலாம்.

ENGINE START / STOP SYSTEM:

காரை நிழல் பகுதியில் நிறுத்துவது நல்லது. ஆனால் சிக்னல் அல்லது நண்பருக்காக காத்திருக்கும் போது, நம்மில் பலர் இன்ஜினை ஆப் செய்வதில்லை. ஏனேன்றால், வெயில் காரணமாக, காரில் உஷ்ணம் தெரியக் கூடாது என்பதற்காக ஏசி ஓடிக் கொண்டிருக்கும். அதனால் எரிபொருள் தேவையின்றி வீணாவதுடன், சுற்றுச்சுழல் பாதிப்படைகிறது. இதனை தவிர்ப்பதற்காக, லக்ஸுரி கார்களில் இருந்த இந்த தொழில்நுட்பமானது, தற்போது 10-15 லட்ச ருபாய் மஹிந்திரா கார்களில் இருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம். இது கார் சில வினாடிகள் நியுட்ரலில் இருக்கும் போது, இனஜினை தானாக ஆப் செய்து விடும். கிளட்சை மிதித்தால், இன்ஜின் மீண்டும் உயிர் பெறும். இதனால் இன்ஜின் ஐடிலிங்கில் இருக்கும் நேரம் குறைந்து, எரிபொருள் சேமிக்கப்படுகிறது.

CRUISE CONTROL SYSTEM:

டுரர் கார்களில் இருந்த இந்த தொழில்நுட்பமானது, தற்போது 10 லட்ச ருபாய் செடான் கார்களில் இருப்பது, ஆரோக்கியமான விஷயம். இது காரின் வேகத்தை நிலைப்படுத்தி, ஆக்ஸிலரேட்டரின் தேவையை குறைக்கிறது. இதனால் வாகனத்தின் மைலேஜ் கூடும். மேலும் அதிக வேகங்களில், காரின் கண்ணாடிகளை ஏற்றிவிட்டு, மிதமாக ஏசியை ஓடவிடுவது, வாகனத்தின் DRAG குறைந்து, ஏரோடைனமிக்ஸ் மற்றும் மைலேஜில் முன்னேற்றம் காணலாம்.

DIRECT FUEL INJECTION SYSTEM:

HIGH PERFOMANCE இன்ஜின்களில் இருந்த இந்த தொழில்நுட்பமானது, தற்போது சிறிய கார்களில் இருப்பது, நல்ல முன்னேற்றம். இது அதிகமான அழுத்தத்தில், தேவையான எரிபொருள் மற்றும் காற்றை, NOZZLE முலமாக நேரடியாக இன்ஜினுக்குள் செலுத்துவதால், மைலேஜ் கூடும். மேலும் குறைந்த மாசு வெளிப்படும். நாம் சிக்னலை நெருங்கப் போகிறோம் என்றால், முன்கூட்டியே ஆக்ஸிலரேட்டரில் இருந்து காலை எடுத்து விட்டால், எரிபொருள் தேவையின்றி வீணாகாது. பின்பு பிரேக்கை மெதுவாக அழுத்தினால், வாகனம் தள்ளாட்டமின்றி நிற்கும்.

CYLINDER MANAGEMENT SYSTEM:

ஸ்போர்ட்ஸ் கார்களில் இருந்த இந்த தொழில்நுட்பமானது, பெரிய இன்ஜின் கொண்ட லக்ஸுரி கார்களில் சேர்க்கப்பட்டுள்ளது. இது CRUISE CONTROL உடன் இணைந்து பணிபுரிகிறது. மேலும் நிலையான வேகத்தை தக்க வைப்பதற்காக தேவையான சிலிண்டர்களை மட்டுமே இயங்க வைப்பதால், குறைவான எரிபொருள் தேவை மற்றும் மாசு வெளிப்படும். முழு பலத்தையும் ஆக்ஸிலரேட்டரில் காட்டாமல், தன்மையாக பயன்படுத்தினால், மைலேஜ் கணிசமாக உயரும். மேலும் பிரேக் மற்றும் டயரின் ஆயுள் கூடும்.

ALL ALUMINIUM ENGINE:

பொதுவாக வாகனத்தின் எடை தான், மைலேஜை தீர்மானிக்கிறது. இதில் இன்ஜின் முக்கிய பங்காற்றுகிறது. அதனால் எடைக் குறைப்புக்காக, வாகனத்தில் அ்லுமினியம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது DRAG & FRICTION ஆகியவற்றை கட்டுப்படுத்துவதால், வாகனத்தின் செயல்திறன்  மற்றும் மைலேஜை அதிகரிக்கிறது. இன்ஜின் பிரேக்கிங் பயன்பாடு முலம் குறைவான எரிபொருள் தேவை மற்றும் குறைவான மாசு வெளிப்படும்.

TURBOCHARGER:

டிசல் இன்ஜின்களில் பிரதான பாகமாக இருப்பது, டர்போசார்ஜர். அதிகமான அழுத்தத்தில், தேவையான எரிபொருள் மற்றும் காற்றை, NOZZLE முலமாக  இன்ஜினுக்குள் செலுத்தி விரைவில் எரியுட்ட உதவுகிறது. ENGINE DOWNSIZING கொள்கைப்படி, தற்போது சிறிய பெட்ரோல் இன்ஜின்களில் பயன்படுத்தப்படுகிறது. குறைந்த எரிபொருளில் அ்திக சக்தி கிடைக்கிறது. மேலும் EGR VALVE, இன்ஜின் வெளியேற்றும் காற்றை, டர்போசார்ஜருக்கு திருப்பி அனுப்புவதால், சுற்றுச்சுழல் பாதிப்படைவது குறைகிறது.

No comments:

Post a Comment