Sunday, 23 August 2015

2015 சுஸுகி ஹயாதே


ஜப்பானில், ஹயாதே என்றால் FRESH BREEZE அல்லது SWIFT WIND என்று பொருள். ஆனால் பெயருக்கேற்றபடி 2012 முதல், புதிய மாற்றத்தையோ, விரைவான விற்பனையையோ சுஸுகியால் செய்ய முடியவில்லை. தற்போது 2015ல், மேம்படுத்தப்பட்ட ஹயாதேவை தினசரி நகரத்தில் பைக் பயன்படுத்துவோரை குறிவைத்து களமிறக்கியுள்ளது சுஸுகி.

மாற்றங்கள்:




முதலில் தெரிவது 5 புதிய கலர்கள் மற்றும் கிராபிக்ஸ். புதிய 17 இன்ச் MRF டியுப்லேஸ் டயர்கள் போதுமான கிரிப்பை அளிக்கின்றன. அலுமினியம் அலாய் வீல்கள், பைக்கிற்கு நல்ல தோற்றத்தை தருகிறது. புதிய 10.5 லிட்டர் பெட்ரோல் டெங்க், கால்களுக்கு நல்ல சப்போர்ட் அளிக்கிறது. பைக்கின்   எடை 2 கிலோ உயர்ந்தாலும் [114 கிலோ], நகர டிராஃபிக்கில் பைக்கை வளைத்து நெளித்து ஓட்டும் வகையில் வடிவமைத்துள்ளது சுஸுகி. புதிய 5 வகை ADJUSTABLE ஸ்பிரிங் சஸ்பேன்ஷன், நல்ல ஓட்டுதல் தரத்தை அளிக்கிறது. மெயின்டனென்ஸ் FREE பேட்டரி சேர்க்கப்பட்டுள்ளது சிறப்பு. இந்த பைக்கின் சென்னை ஆன் ரோடு விலை ரு. 59, 905.

மாறாதது:



பைக்கின் நீள, அகல, உயர அளவுகளில் மாற்றமில்லாதது நல்ல விஷயம். 85கிலோ மீட்டர் அதிகபட்ச வேகம் மற்றும் 60 கிலோ மீட்டர் மைலேஜ் கொண்ட ஸ்முத்தான 112.8 சிசி  இன்ஜினில், SEP டெக்னாலஜி இல்லாதது மைனஸ். பெட்ரோல் டேங்க் முடி பழைய டிசைனில் இருப்பது நெருடலாக உள்ளது. அடிப்படையான பாஸ் லைட் ஸ்விட்ச் மற்றும் வென்பனி இண்டிகேட்டரை சேர்க்காமல் விட்டுவிட்டது சுஸுகி. டிஸ்க் பிரேக் ஆப்ஷன் இல்லை. இப்படி விலை குறைப்புக்காக சுஸுகி செய்திருக்கும் வேலைகள், பைக்கின் தனித்தன்மையான டிசைனை குலைத்துவிடுகிறது.  ஆனால் பைக்கின் பிரேக்கிங், கையாளுமை, நிலைத்ததன்மை, தரம் ஆகியவை நிறைவாக உள்ளது. ஸ்பிளேண்டர், டிஸ்கவர், ட்ரிம் சீரிஸ் பைக்குகளை பார்த்து சலித்தவர்களுக்கு, இந்த பைக் மாற்றாக அமையும் என்பதே உண்மை.



No comments:

Post a Comment