இந்தியாவில் யமஹா என்றவுடன் பலரின் நினைவுக்கு வருவது R15,
RX-100, RD 350,FZ மற்றும் பேஸர் போன்ற பெர்பாமென்ஸ்
பைக்குகள் தான். ஆனால் இந்தியாவில் வாகனம் என்றால் மைலேஜும் தேவை என்பவர்களே அதிகம்.
அதனை உணர்ந்த யமஹா, SALUTO என்ற பைக்கை போட்டியாளர்கள் அதிகம் இருக்கும் 125 சிசி
செக்மெண்டில் களமிறக்கியுள்ளது். அது எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.
டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள்:
முதலில் தெரிவது, அளவான கிராபிக்ஸ் மற்றும் 6 கலர் ஆப்ஷன்கள்.
FZ பைக்கின் தாக்கம், பைக்கின் ஹெட்லைட் மற்றும் பெட்ரோல் டேங்கில் தெரிகிறது. சைட்
மிரர், இன்ஜின், அலாய் வில்கள், எக்ஸாஸ்ட் கறுப்பு நிறத்தில் உள்ளன. சைட் பேனல்கள் மற்றும் எக்ஸாஸ்ட் டிசைன் வித்தியாசமாக உள்ளது.
இண்டிகேட்டர்கள் வென்பனி நிறத்தில் உள்ளன. கைப்பிடிகள், சுவிட்ச்சுகள் தரமாக
இருக்கின்றன. பின்பக்க டிசைனில் குறிப்பிட்டு கூறும் அளவிற்கு எதுவும் இல்லை. ஸ்பிடோ மீட்டர் டிசைன் டிஸ்கவர் பைக்கில்
இருப்பது போன்றுள்ளது. இந்த பைக்கின் சீட் வசதியாக உள்ளது. ஒட்டு மொத்தமாக வாகனத்தின்
பெயின்ட், பினிஷ் மற்றும் கட்டுமானத் தரம் சிறப்பாக உள்ளது.
இன்ஜின் பெர்பாமென்ஸ்:
SALUTO பைக்கில் இருப்பது
புதியதாக வடிவமைக்கப்பட்ட 125சிசி, கார்புரேட்டட் ப்ளூகோர் இன்ஜினைக்கொண்டுள்ளது. பவர் மற்றும் டார்க் முறையே
8.3HP@7000RPM மற்றும் 10.1NM@4500RPM என்ற அளவில் உள்ளது. இன்ஜின் ஸ்முத்தாக இயங்குகிறது.
லைட்டான கிளட்ச் 4 கியர்களையும் எளிதாக மாற்றுவதற்கு உதவுகிறது. 60 கிலோமிட்டர் வேகத்தை
விரைவாக எட்டும் இன்ஜின், 80 கிலோமிட்டர் வேகத்தை எட்டியவுடன் வாகனத்தில் அதிர்வுகள்
தெரிகிறது. வாகனத்தின் அதிகபட்ச வேகம் 95கிலோமிட்டர். வாகனத்தின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 180MM, இன்ஜின் அடிபடாமல் இருக்க உதவுகிறது.
ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை:
சிட்டி டிராபிக்கில் எளிதாக
பயன்படுத்தும் வகையில் வாகனத்தை வடிவமைத்துள்ளது யமஹா. 7.6 லிட்டர் கொள்ளளவு கொண்ட
பெட்ரொல் டேங்க் கால்களுக்கு நல்ல சப்போர்ட் அளிக்கிறது. ரியர் வியூ கண்ணாடிகள் பின்னால்
வரும் வாகனங்களைத் தெளிவாகக் காட்டுகின்றன. வாகனத்தின் சேஸி அமைப்பு வாகனத்தின் எடையை
112 கிலோ என்ற அளவில் குறைக்க உதவி இருக்கிறது. ஆனால் இதுவே வாகனத்தின் நிலைத்த தன்மையை
அதிக வேகங்களில் குறைத்துவிடுகிறது. சியட் டியுப்லேஸ் டயர்கள் போதுமான கிரிப்பை அளிக்கிறது.
முன்பக்க டெலிஸ்கோபிக் மற்றும் பின்பக்க ஸ்பிரிங் சஸ்பென்ஷன் மோசமான சாலைகளிலும் நல்ல
ஓட்டுதல் தரத்தை அளிக்கிறது. முன்பக்க மற்றும் பின்பக்க 130MM டிரம் பிரேக்குகள் போதுமானதாக
இல்லை. முன்பக்க டிஸ்க் பிரேக் ஆப்ஷன் உண்டு.
மைலேஜ் மற்றும் விலை:
ஓரு லிட்டர் பெட்ரோலுக்கு 78கிலோமிட்டர் துாரம் செல்லும் என்கிறது யமஹா. ஆனால்நமது சிட்டி டிராபிக்கில் 60கிலோமிட்டர் மைலேஜ் கிடைக்கிறது. இவ்வாகனங்களின்
டில்லி எக்ஸ் ஷோரும் விலை ரு. 52000 மற்றும் ரு. 54,500. இந்த விலைக்கு வழக்கமான ஒரு
125சிசி பைக்கிற்கு உரிய வசதிகளைக் கொண்டிருக்கிறது SALUTO. ஆனால், இன்ஜின் மற்றும்
டிசைன் விஷயத்தில் நம்மை ஏமாற்றவில்லை யமஹா.
No comments:
Post a Comment