இந்தியாவில் யமஹா என்றவுடன் பலரின் நினைவுக்கு வருவது பைக்குகள்
தான். ஆனால் ஸ்கூட்டர்களின் விற்பனை உயர்ந்து கொண்டே இருந்ததால், 2012ல் ரே முலமாக
போட்டி மிகுந்த ஸ்கூட்டர் சந்தையில் நுழைந்தது யமஹா. தற்போது 2015ல், இளம் வயதினரை
மனதில் வைத்து, ஃபாஸினோ என்ற ஸ்கூட்டரை தயாரித்துள்ளது யமஹா.
டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள்:
பியாஜியோ வெஸ்பாவை அடிப்படையாகக் கொண்டு, ஃபாஸினோவை வடிவமைத்துள்ளது
யமஹா. ரெட்ரோ ஸ்டைல் ஹெட்லைட்ஸ், பெரிய இண்டிகேட்டர் லைட்டுகள், க்ரோம் ஃபினிஷ் கொண்ட
ரியர் வியூ மிரர்கள், யமஹா லோகொவுடன் சிறிய கிரில் என வாகனத்தின் முன்பக்கம் சிறப்பாக
உள்ளது. பின்பக்க டிசைன் வித்தியாசமாக உள்ளது. அமர்வதற்கு சொகுசான இருக்கைக்கு அடியில்,
ஹெல்மெட் ஒன்றை வைத்துக்கொள்ளக் கூடிய அளவுக்கு 21 லிட்டர் கொள்ளளவு இடவசதி உள்ளது.
சாவி துவாரம் அருகில் பாட்டில் ஹோல்டர்கூட உண்டு. ஆனால் கிளோவ் பாக்ஸ் இல்லை. அனலாக்
இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் ஸ்பீடோ மீட்டர், ஓடோ மீட்டர், ஃப்யூல் மீட்டர்கள் உள்ளன.
வெஸ்பா போன்று டிஜிட்டல் கடிகாரம் இல்லை.ஒட்டு மொத்தமாக வாகனத்தின் பெயின்ட், பினிஷ்
மற்றும் கட்டுமானத் தரம் நன்றாக உள்ளது.
இன்ஜின் பெர்பாமென்ஸ்:
ஃபாஸினோ ஸ்கூட்டரில் இருப்பது ரே, ஆல்ஃபா ஸ்கூட்டர்களில் உள்ள
113 சிசி, 4-ஸ்ட்ரோக், கார்புரேட்டட் ப்ளூகோர் இன்ஜின்தான். இது 7 bhp சக்தியை
7,500 ஆர்பிஎம்-லும், 0.8 kgm டார்க்கையும் அளிக்கிறது. இன்ஜின் ஸ்முத்தாக இயங்குகிறது
என்பதால், வைப்ரேஷன் இல்லை. வாகனத்தின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 128MM, குறைவாக உள்ளது.
மேலும் ஸ்கூட்டரின் எடை 103 கிலோ தான். வாகனத்தின் மிட் ரேஞ்ச் பெர்பாமென்ஸ் சிறப்பாக
உள்ளது.
ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை:
முன்பக்கம் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் உள்ளதால், மற்ற யமஹா ஸ்கூட்டர்களைப்
போல நல்ல ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமையைக் கொண்டிருக்கிறது ஃபாஸினோ. சிட்டி டிராபிக்கில்
எளிதாக பயன்படுத்தும் வகையில் வாகனத்தை வடிவமைத்துள்ளது யமஹா. இருக்கையின் உயரம் சற்று
அதிகமாக இருக்கிறது. மேலும் 5.2 லிட்டர் பெட்ரோல் டேங்க் போதுமானதாக இருக்கிறது.
MRF டயர்கள் போதுமான கிரிப்பை அளிக்கிறது. கால்கள் வைப்பதற்கு நிறைய இடம் இருக்கிறது.
குறை என்னவேன்றால் வெஸ்பா போன்று முன்பக்க டிஸ்க் பிரேக் மற்றும் டியுப்லேஸ் டயர்கள்
கொண்ட அலாய் வில்கள் இல்லை. மேலும் முன்பக்க மற்றும் பின்பக்க 110MM டிரம் பிரேக்குகள்
நன்றாக இயங்கினாலும், போதுமானதாக இல்லை.
மைலேஜ் மற்றும் விலை:
ஓரு லிட்டர் பெட்ரோலுக்கு 66 கிலோமிட்டர் துாரம் செல்லும் என்கிறது
யமஹா. ஆனால் நமது சிட்டி டிராபிக்கில் 50கிலோமிட்டர் மைலேஜ் கிடைக்கிறது. இவ்வாகனத்தின்
டில்லி எக்ஸ் ஷோரும் விலை ரு. 52,500. இந்த விலைக்கு வழக்கமான ஒரு ஸ்கூட்டருக்கே உரிய
வசதிகளைக் கொண்டிருக்கிறது ஃபாஸினோ. ஆனால், இன்ஜின் மற்றும் டிசைன் விஷயத்தில் நம்மை
ஏமாற்றவில்லை யமஹா.
No comments:
Post a Comment