Wednesday, 19 August 2015

பைக் மெயின்டனென்ஸ் டிப்ஸ்:


டயர் & வீல்: நமது நகரத்து சாலைகளின் நிலை படி, சராசரியாக 35,000 கிலோமீட்டர்கள் என்பது வழக்கமான பைக் டயரின் ஆயுள். டயர் THREAD PATTERN அழிந்து, டயர் தேயும் வரை பயன்படுத்தக் கூடாது. SOFT COMPOUND டயர்கள், வாகனத்தின் நிலைத்ததன்மை, கையாளுமை, ஓட்டுதல் தரம் மற்றும் பிரேக்கிங் பெர்ஃபாமென்ஸை அதிகரிக்கும். ஆனால் இவற்றின் சராசரி ஆயுள் 20,000 கிலோமீட்டர்கள். டியுப்லேஸ் டயர்கள் டியுப் டயர்களை விட எடை குறைவு மற்றும் பஞ்சர் ஆனாலும் உடனடியாக காற்று இறங்காது. மேலும் பைக்கிற்கு சம்பந்தமில்லாத சைஸில் பெரிய டயர் மாட்டுவது, பைக்கின் செயல்திறனை பாதிக்கும். டயர்களில் சரியான காற்றழுத்தை வைத்திருந்தால், வீல் பெண்ட் ஆகாமல் இருக்கும். குறைவான காற்றழுத்தம் இருந்தால், மைலேஜ் குறைந்து, டயர் அதிகமாக தேய்ந்து, இறுதியாக வீல் பெண்டாகும்.


சஸ்பேன்ஷன்: பைக்கின் பே லோடுக்கு மேல் எடை ஏற்றினால், பைக்கின் சேஸியுடன் சஸ்பேன்ஷன் மற்றும் வீல்கள் சேதமாகும். டெலிஸ்கோபிக் போர்க்கில் ஆயில் அளவு சரியாக இருக்க வேண்டும். மேலும் ஷாக் அப்சார்பர் ஸ்பிரிங்கில் தேவையான அளவு இறுக்கத்தை செட் செய்ய வேண்டும். இல்லையேன்றால், பைக்கை ஓட்டுபவர் முதுகு மற்றும் கழுத்து வலியால் அவதிப்பட நேரிடும். மேலும் சஸ்பேன்ஷன் சரியான திசையில் மவுன்ட் செய்யப்பட வேண்டும்.


பிரேக்ஸ்: பைக்கை  ஓட்ட ஆரம்பித்தவுடன், பிரேக்கில் இருந்து கால் மற்றும் கையை எடுத்துவிட்டு, மீண்டும் தேவைப்படும் போது மட்டும் பயன்படுத்த வேண்டும். இல்லையேனில், பிரேக் பேட் தேய்ந்து, மைலேஜ் குறையும். பிரேக் பயன்படுத்ததும் போது கிளட்ச்சை பிடித்தால், வாகனத்தின் நிலைத்ததன்மை பாதிக்கப்படும். மேலும் இரு பிரேக்குகளையும் ஒரு சேர பயன்படுத்துவது அவசியம். இல்லையேன்றால் வீல் லாக் ஆகி, பைக் ஸ்கிட் ஆகும். டிரம் பிரேக் லூசாக இருக்க கூடாது. டிஸ்க் பிரேக் சுத்தமாகவும், பிரேக் ஆயில் அளவு சரியாக இருக்க வேண்டும். இல்லை என்றால், பைக் நிற்கும் தூரம் அதிகமாகும்.


பேட்டரி & எலெக்ட்ரிகல்ஸ்: காலையில் பைக் எடுக்கும் போது கிக்கரை பயன்படுத்தினால், பேட்டரி மற்றும் DYNAMO-ALTERNATOR ஆயுள் கூடும். தொடர்ந்து செல்ப் அடிப்பது, பேட்டரியின் சக்தியை குறைத்து விடும். பைக்கிற்கு சம்பந்தமில்லாத சைஸில் பெரிய லைட் மற்றும் ஹாரன் பொருத்துவது, எலெக்ட்ரிக்கல் சர்க்யுட்டை பாதிக்கும். மேலும் பேட்டரியில் டிஸ்டில்டு வாட்டர் சரியான அளவில் இருக்க வேண்டும்.


ஏர் பில்டர் & செயின் ஸ்பிராக்கெட்: ஏர் பில்டர் சுத்தமாக இல்லாவிட்டால், COMBUSTION CHAMBER சேதமாகும் வாய்ப்புகள் அதிகம். பெர்ஃபாமென்ஸ் ஏர் பில்டர்கள், சக்தி மற்றும் மைலேஜை அதிகரிக்கிறது. சராசரியாக செயின் ஸ்பிராக்கெட் 30,000 கிலோமீட்டர வரை உழைக்கும். மேலும் செயின் ஸ்பிராக்கெட் தேவையான அளவு LUBRICATE மற்றும் இறுக்கமாக இருத்தல் அவசியம். இல்லையேன்றால் பைக்கின் பெர்ஃபாமென்ஸை பாதிக்கும்.
கார்புரேட்டர் & ஸ்பார்க் பிளக்: இவ்விரண்டும் எப்போதும் சுத்தமாக இருந்தால், இன்ஜின் சிறப்பாக இயங்கும். இரிடியம் ஸ்பார்க் பிளக், சக்தி மற்றும் மைலேஜை அதிகரிக்கிறது. சோக் மற்றும் IDLE SCREW தேவைப்படும் போது மட்டும் பயன்படுத்த வேண்டும். இல்லையேனில் பெட்ரோல் அதிகம் விரயமாகும். கார்புரேட்டர் சரியாக டியுன் செய்யப்பட்டிருக்க வேண்டும்.


இன்ஜின் & கிளட்ச்: கியர் மாற்றுவதற்கு மட்டுமே கிளட்ச்சை பயன்படுத்த வேண்டும். பிரேக் பயன்படுத்ததும் போது கிளட்ச்சை பிடித்தால், வாகனத்தின் நிலைத்ததன்மை பாதிக்கப்படும். மேலும் கிளட்ச் பிளேட் அதிகமாக தேயும். கிளட்ச் லிவர் மற்றும் கேபிள் சரியாக செட் செய்ய வேண்டும்.     இல்லையேனில் கியர்பாக்ஸ் சேதமாகும். மேலும் கை மற்றும் தோள் வலி ஏற்படும். RECOMMEND செய்யப்பட்ட கிரேடு மற்றும் அளவு இன்ஜின் ஆயிலை, 3000 கிலோமீட்டருக்கு ஒரு முறை மாற்றி வந்தால், இன்ஜின் ஆயுள் கூடும். காலையில் பைக் எடுக்கும் போது, இன்ஜினை ஸ்டார்ட் செய்த உடனே, ஆக்ஸிலரேட்டரை முறுக்காமல், ஐடிலிங்கில் ஓடவிட்டால், இன்ஜின் ஆயில் இன்ஜினுள் பரவி, போதுமான வெப்பத்தை அடைய உதவும். பிரிமியம் பெட்ரோல் மற்றும் சிந்தெடிக் இன்ஜின் ஆயில் பயன்படுத்தினால், இன்ஜின் சக்தி மற்றும் ஆயுள், மைலேஜ் ஆகியவை அதிகரிக்கிறது. மேலும் புகை மாசு கட்டுப்படுத்தப்படுகிறது.


பைக்கை நிழலில் நிறுத்தினால், சீட் வெப்பமாவதை மற்றும் பெட்ரோல் ஆவியாவதை தடுக்கலாம். மேலும் பைக்கை கவர் கொண்டு முடினால், பைக் சுத்தமாக இருக்கும். ISI ஹால்மார்க் மற்றும் ஏர் வென்ட் கொண்ட ஹெல்மேட்டை, பைக் ஓட்டும் போது, கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். பெட்ரோல் டெங்க் மீது பொருட்கள் வைப்பது, பைக்கை ஓட்டுபவருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். எப்போதும் அரை டேங்க் பெட்ரோல் இருப்பது, மைலேஜ் மற்றும் இன்ஜின் ஆயுளை அதிகப்படுத்தும். மாதம் ஒரு முறை, பைக்கை வாட்டர் வாஷ் செய்வது நலம்.

                                                          

No comments:

Post a Comment