டிவிஎஸ் பினிக்ஸ் 125, 2012ல் அறிமுகப்படுத்தப்பட்டது. பெயருக்கெற்ற
விற்பனை வரலாறு இல்லாவிட்டாலும், தினசரி நகரத்தில் பயன்படுத்த சிறப்பான வாகனமாக இருந்தது.
தற்போது 2015ல், மேம்படுத்தப்பட்ட பைக்கை களமிறக்கியுள்ளது டிவிஎஸ்.
மாற்றங்கள்:
முதலில் தெரிவது 6 புதிய கலர்கள் மற்றும் கிராபிக்ஸ். வைசர்
ஸ்போர்ட்டியாக உள்ளது. புதிய டிவிஎஸ் டியுப்லேஸ் டயர்கள் போதுமான கிரிப்பை அளிக்கின்றன.
வெள்ளை BACKLITல் ஆர்பிஎம் மீட்டர், ஸ்பிடோ மீட்டர், 2 டிரிப் மீட்டர், பியுல் கேஜ்
என அனைத்தும் டிஜிட்டலில் தெளிவாக இருப்பது சிறப்பு. LED பார்க்கிங் லேம்ப் கொண்ட
DC ஹெட்லைட் நல்ல வெளிச்சம் தருகிறது. CENTURO பைக் போல, பைக் சாவியில் இருக்கும் பட்டனை
அழுத்தினால், HAZARD இண்டிககேட்டர்கள் ஒளிர்ந்து, பார்க்கிங்கில் பைக்கின் இருப்பிடத்தை
காட்டுகிறது. 12 லிட்டர் பெட்ரோல் டேங்கில், ஏர் ஸ்கூப் மற்றும் கிரோம் லோகோ சேர்க்கப்பட்ட
விதம் நன்று. பைக்கின் சொகுசான சீட்டில் நுால் வேலைப்பாடுகள் இடம் பெற்றுள்ளன. புதிய
கேஸ் சார்ஜ் சஸ்பேன்ஷன், நல்ல ஓட்டுதல் தரத்தை அளிக்கிறது. கிராப் ரெயில் டிசைன் ஸ்கூட்டியில்
இருப்பது போல உள்ளது. இந்த பைக்கின் சென்னை எக்ஸ் ஷோரும் விலை டிரம் பிரேக் கொண்ட பைக் ரு. 55,545 மற்றம் டிஸ்க் பிரேக் கொண்ட பைக்
ரு. 57, 645.
மாறாதது:
பைக்கின் நீள, அகல, உயர அளவுகள் மற்றும் எடையில் மாற்றமில்லாதது
நல்ல விஷயம். 95கிலோ மீட்டர் அதிகபட்ச வேகம் மற்றும் 55 கிலோ மீட்டர் மைலேஜ் கொண்ட
ஸ்முத்தான 125 சிசி ECOTHRUST இன்ஜினில், 5 ஸ்பிட் கியர்பாக்ஸ் இல்லாதது மைனஸ்.
LED டெயில் லைட் இல்லையேன்றாலும், பெட்ரோல் டேங்க் முடி பழைய டிசைனில் இருப்பது நெருடலாக
உள்ளது. மேலும் பைக்கின் பிரேக்கிங், கையாளுமை, நிலைத்ததன்மை, தரம் ஆகியவை நிறைவாக உள்ளது. ஆனால் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, மேம்படுத்தப்பட்ட டிவிஎஸ் பினிக்ஸ்
125, இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயது ஆண்களைக் கவரும் வகையில் உள்ளது. ஷைன், ஸ்பிளேண்டர்,
டிஸ்கவர் பைக்குகளை பார்த்து சலித்தவர்களுக்கு, இந்த பைக் மாற்றாக அமையும் என்பதே உண்மை.
No comments:
Post a Comment