Saturday, 1 August 2015

2015 சுஸுகி ஜிக்ஸர் SF


இந்தியாவில் சுஸுகி பைக் என்றவுடன் பலரின் நினைவுக்கு வருவது டிவிஎஸ் கூட்டுத் தயாரிப்பில் உருவான MAX-100R, SHOGUN, FIERO ஆகிய வாகனங்கள் தான். ஆனால் டிவிஎஸ் கூட்டணி 2001ல் முடிவுக்கு வந்த பிறகு, ஸ்கூட்டர்களைத் தவிர சொல்லிக் கொள்ளும் படி எந்த பைக்கும் சுஸுகியிடமிருந்து வரவில்லை. 2014ல் வெளிவந்த ஜிக்ஸர், இந்தியாவில் சுஸுகியின் வெற்றிக் கணக்கை மிண்டும் துவக்கி வைத்தது. அதனை தக்க வைப்பதற்காக, ஃபுல் ஃபேரிங் கொண்ட ஜிக்ஸர் SF பைக்கை தயாரித்துள்ளது சுஸுகி. SF என்றால் SPORTS FAIRING என்று அர்த்தம்.

டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள்:

புதிய ஃபுல் ஃபேரிங்கில், ஜிக்ஸர் பைக்கில் இருந்த அதே ஹெட்லாம்ப் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் கிராபிக்ஸ் மற்றும் ஃபேரிங் டிசைன் சிறப்பாக உள்ளது. இதனால் பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது, பைக் அட்டகாசமாக இருக்கிறது. ஹயபூஸா, GSX-R, GSX-RR போன்ற பைக்குகளின் ஃபேரிங் உருவாக்கப்பட்ட அதே விண்டு டணலில்தான் ஜிக்ஸர் SF-ன் ஃபேரிங் டிசைனும் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனால் ஜிக்ஸரைவிட அதிக ஏரோடைனமிக்ஸ், டாப் ஸ்பீடு, டவுன்ஃபோர்ஸ் என மேம்பட்டுள்ளது ஜிக்ஸர் SF. மாற்றங்கள் என்னவென்றால் புதிய ஒற்றை ஹேண்டில்பார் கிளாம்ப், சாவியில் கிரொம் சுஸூகி லோகோ, வென்பனி இண்டிகேட்டர்கள், அலாய் எக்ஸாஸ்ட் எண்ட் கப், ஃபேரிங்கில் ரியர் வியூ கண்ணாடிகள் உள்ளன. டிசைன் தவிர சாதாரண ஜிக்ஸரும், ஜிக்ஸர் SF பைக்கும் டெக்னிக்கலி ஒன்றுதான். இன்ஜின் கில் சுவிட்ச் உள்ளது. மேலும் ஆர்பிஎம் மீட்டரோடு 2 டிரிப் மீட்டர், ஸ்பீடோ மீட்டர், ஃப்யூல் மீட்டர், கடிகாரம், கியர் இண்டிகேட்டர் என அனைத்தும் டிஜிட்டலில் கொடுக்கப்பட்டிருக்கிறது. கைப்பிடிகள், சுவிட்ச்சுகள் தரமாக இருக்கின்றன. இந்த பைக்கின் பில்லியன் சீட் சற்று உயரமாக இருந்தாலும் வசதியாக உள்ளது. ஒட்டு மொத்தமாக வாகனத்தின் பெயின்ட், பினிஷ் மற்றும் கட்டுமானத் தரம் சிறப்பாக உள்ளது.

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்:

ஜிக்ஸர் SF பைக்கில் இருப்பது ஜிக்ஸரில் இருந்த அதே சிங்கிள் சிலிண்டர் மற்றும் கார்புரேட்டட் 154.9சிசி இன்ஜினைக்கொண்டுள்ளது. பவர் 8,000 rpm-ல் 14.8bhp சக்தியை வெளிப்படுத்துகிறது மற்றும் 6,000 ஆர்பிஎம்-ல் 1.43kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. மேலும் ஜிக்ஸர் பைக்கைவிட [135 கிலோ] ஜிக்ஸர் SF பைக்கின் எடை 4 கிலோ மட்டுமே [139 கிலோ] அதிகம். ஜிக்ஸரைவிட  சிறப்பான ஏரோடைனமிக்ஸ், டவுன்ஃபோர்ஸ் இருப்பதால், SF பைக்கின் டாப் ஸ்பீடு [120 கிலோ மிட்டர்] அதிகமாக இருக்கிறது. மேலும் ஆக்ஸிலரேட்டரை முறுக்கினால் நல்ல சத்தத்தோடு இன்ஜின் நன்றாக ரெவ் ஆகிறது. லைட்டான கிளட்ச் 5 கியர்களையும் எளிதாக மாற்றுவதற்கு உதவுகிறது. இன்ஜின் ஸ்முத்தாக இயங்குவதால் வைப்ரேஷன் கன்ட்ரோல் செய்யப்பட்டுள்ளது.

ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை:


சிட்டி டிராபிக் மற்றும் நெடுஞ்சாலையில் வசதியாக பயன்படுத்தும் வகையில் வாகனத்தை வடிவமைத்துள்ளது சுஸுகி. ரியர் வியூ கண்ணாடிகள் பின்னால் வரும் வாகனங்களைத் தெளிவாகக் காட்டுகின்றன. வாகனத்தின் கிரவுண்ட்  கிளியரன்ஸ் 160MM, இன்ஜின் அடிபடாமல் இருக்க உதவுகிறது. சீட்டிங் பொசிஷன் ஸ்போர்ட்டியாகவும், தினமும் நகருக்குள் ஓட்டுவதற்கு ஏற்ப கொஞ்சம் உயரமாகவும் இருக்கிறது. அதிக வேகங்களில் வாகனத்தின் கையாளுமை நன்றாக வளைவுகளில் வளைத்து நெளித்து ஓட்டும் வகையில் சிறப்பாக இருக்கிறது. 12லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரொல் டேங்க் கால்களுக்கு நல்ல சப்போர்ட் அளிக்கிறது. 17 இன்ச் MRF டியுப்லேஸ் டயர்கள் நல்ல கிரிப்பை அளிக்கிறது. முன்பக்க டெலிஸ்கோபிக் மற்றும் பின்பக்க மோனொஷாக் ஸ்பிரிங் சஸ்பென்ஷன் மோசமான சாலைகளிலும் நல்ல ஓட்டுதல் தரத்தையும் நிலைத்ததன்மையும் அளிக்கிறது. ஆனால் ஜிக்ஸரில் இருக்கும் அதே ரைடிங் பொசிஷன், இந்த பைக்கின் தோற்றத்திற்கு செட் ஆகவில்லை. ஜிக்ஸர் SF பைக்கில் முன்பக்கம் 266 மிமீ டிஸ்க் பிரேக்கையும், பின்பக்கம் 130 மிமீ டிரம் பிரேக்கையும் கொண்டுள்ளது. அதனால் பிரேக்கிங் போதுமான அளவில் தான் உள்ளது.

மைலேஜ் மற்றும் விலை:

நமது சிட்டி டிராபிக்கில் , ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 45 கிலோ மிட்டர் மைலேஜ் கிடைக்கிறது. சென்னையில் இவ்வாகனத்தின் ஆன் ரோடு விலை ரு. 95, 325 மற்றும் மோட்டோ ஜீபி நீல வண்ணம் ரு. 97, 000. குறைந்த விலையில் ஃபுல் ஃபேரிங் பைக்கை தயாரித்திருக்கிறது சுஸூகி. மேலும் நகருக்குள் தினமும் ஓட்டுவதற்கு மற்றும் ஜாலி ரைடுக்கு ஏற்ப பிராக்ட்டிக்கல் பைக்காக இருக்கிறது. ஆனால் ஹோண்டா CBR 150R, யமஹா R15 போன்ற பைக்குக்கு உண்மையான போட்டி என்று சொல்ல முடியாது.

No comments:

Post a Comment