Thursday, 20 August 2015

2015 ஹோண்டா லிவோ 110


இந்தியாவில் ஹோண்டா நிறுவனத்தின் 110 சிசி ஸ்கூட்டர்கள் விற்பனை ஆகும் அளவிற்கு, 110 சிசி பைக்குகள் விற்கவில்லை. டிவிஸ்டர் ஏமாற்றினாலும், ட்ரிம் சீரிஸ் கொடுத்த நம்பிக்கையில், ஹோண்டா லிவோ என்ற புதிய வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அது டிவிஸ்டர் பைக்கிற்கு மாற்றாக அமையுமா என்பதை பார்ப்போம்.

டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள்:






முதலில் தெரிவது, 4 கலர் ஆப்ஷன் மற்றும் 110 சிசி பைக்கிற்கு ஏற்ற கச்சிதமான டிசைன். பைக்கின் ஹெட்லைட் மற்றும் பெட்ரோல் டேங்க் டிசைனில் யுனிகார்ன் 160 பைக்கின் தாக்கம் தெரிகிறது. மேலும் பாடி பேனல்கள் மற்றும் டெயில் லைட் டிசைன், ட்ரிம் சீரிஸ் பைக்குகளில் இருப்பது போல உள்ளது. இன்ஜின், அலாய் வில்கள், எக்ஸாஸ்ட் கறுப்பு நிறத்தில் உள்ளன. இண்டிகேட்டர்கள் வென்பனி நிறத்தில் உள்ளன. பைக்கின் சீட் இருவர் வசதியாக அமரும் வகையில் உள்ளது சிறப்பு. ஸ்பிடோ மீட்டர் டிசைன் வித்தியாசமாக இருந்தாலும், டிஜிட்டலில் இல்லாதது மைனஸ். பாடி கலரில் உள்ள ரியர் வியு கண்ணாடிகள், பின்னால் வரும் வாகனங்களை தெளிவாக காட்டுகின்றன. ஸ்விட்ச், கைப்பிடி, லீவர்கள் தரமாக உள்ளன. பைக்கின் பெயின்ட், பினிஷ் மற்றும் கட்டுமானத் தரம் சிறப்பாக உள்ளது.

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்:




லிவோ பைக்கில் இருப்பது, ட்ரிம் சீரிஸ் பைக்குகளில் இருக்கும் ஸ்முத்தான 109.2சிசி, சிங்கிள் சிலிண்டர், கார்புரேட்டட் HET இன்ஜினைக் கொண்டுள்ளது. பவர் மற்றும் டார்க் முறையே 8.3HP@7500RPM மற்றும் 8.63NM@5500RPM என்ற அளவில் உள்ளது. பிக்அப் மற்றும் மிட்ரேஞ்ச் சிறப்பாக இருப்பதால், 60 கிலோமீட்டர் வேகத்தை விரைவாக அடையமுடிகிறது. ஆனால் அதற்கு மேல் பைக்கில் வைப்ரேஷன் தெரிகிறது. லைட்டான கிளட்ச், 4 கியர்களையும் எளிதாக மாற்ற உதவுகிறது. வாகனத்தின் அதிகபட்ச வேகம் 90 கிலோமீட்டர். கிரவுண்ட் கிளியரன்ஸ் 180MM, இன்ஜின் அடிபடாமல் இருக்க உதவுகிறது.

ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை:






சிட்டி டிராபிக்கில் எளிதாக பயன்படுத்தும் வகையில் வாகனத்தை வடிவமைத்துள்ளது ஹோண்டா. 8.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரொல் டேங்க் கால்களுக்கு நல்ல சப்போர்ட் அளிக்கிறது. பைக்கை டிராபிக்கில் நன்கு வளைத்து நெளித்து ஓட்டக் கூடிய அளவில் கையாளுமை உள்ளது. வாகனத்தின் சேஸி அமைப்பு வாகனத்தின் எடையை 111 கிலோ என்ற அளவில் குறைக்க உதவி இருக்கிறது. வாகனத்தின் நிலைத்த தன்மை அதிக வேகங்களில் சிறப்பாக இருக்கிறது. 18 இன்ச் MRF டியுப்லேஸ் டயர்கள் நல்ல கிரிப்பை அளிக்கிறது. முன்பக்க டெலிஸ்கோபிக் மற்றும் பின்பக்க ஸ்பிரிங் சஸ்பென்ஷன் மோசமான சாலைகளிலும் நல்ல ஓட்டுதல் தரத்தை அளிக்கிறது. முன்பக்க மற்றும் பின்பக்க 130MM டிரம் பிரேக்குகள் போதுமானதாக இல்லை. முன்பக்க 240MM டிஸ்க் பிரேக் ஆப்ஷன் உண்டு.

மைலேஜ் மற்றும் விலை:





ஓரு லிட்டர் பெட்ரோலுக்கு 74 கிலோமிட்டர் துாரம் செல்லும் என்கிறது ஹோண்டா. ஆனால் நமது சிட்டி டிராபிக்கில் 60கிலோமிட்டர் மைலேஜ் கிடைக்கிறது. இவ்வாகனங்களின் சென்னை ஆன் ரோடு விலை டிரம் பிரேக் மாடல் ரு. 62240 மற்றும் டிஸ்க் பிரேக் மாடல் ரு. 64,968. அதிகமான விலைக்கு வழக்கமான ஒரு 110சிசி பைக்கிற்கு உரிய வசதிகளைக் கொண்டிருக்கிறது ஹோண்டா லிவோ. ஆனால், இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயது ஆண்களைக் கவரும் வகையில் டிசைன் உள்ளதால், விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



No comments:

Post a Comment