Tuesday, 18 August 2015

2015 பஜாஜ் டிஸ்கவர் 125 DTSi



2004ல் பிறந்து, 2008ல் வளர்ந்து, இடையே காணாமல் போய், 2011ல் மீண்டும் அறிமுகமாகி, 2014ல் மறைந்து, பினிக்ஸ் பறவை போல 2015ல் மீண்டு வந்திருக்கிறது பஜாஜ் டிஸ்கவர் 125 DTSi. வாருங்கள் காலத்திற்கேற்ற மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்திருக்கிறதா என்பதை பார்ப்போம்.

டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள்:








பைக்கின் நீளம், அகலம், உயர அளவுகளில் மாற்றமில்லை.  மேலும் பைக்கின் டிசைனில் மாற்றங்கள் இல்லாததால், புதிய வாகனம் என்ற ஈர்ப்பு இல்லை. ஆனால் கிராபிக்ஸ் மற்றும் கலர்களை மேம்படுத்தியுள்ளது பஜாஜ். அலாய் வீல், முன்பக்க ஃபோர்க் மற்றும் இன்ஜின் சில்வர் நிறத்திற்கு மாறியுள்ளது. பெட்ரோல் டேங்கில் புதிய கிரோம் லோகோ, பார்ப்பதற்கு நன்றாக உள்ளது. மற்றபடி 2011ல் இருந்த அதே DC ஹெட்லைட், அனலாக் ஸ்பிடோ மீட்டர், LED டெயில் லைட் டிசைன் சலிபபை தருகிறது. அகலமான சீட் இருவர் வசதியாக அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரிய ரியர் வியு கண்ணாடிகள், பின்னால் வரும் வாகனங்களை தெளிவாக காட்டுகிறது. சுவிட்ச் மற்றும் கைப்பிடி, விலைக்கேற்ற தரத்தில் உள்ளன. பைக்கின் பெயின்ட் மற்றும் கட்டுமானத் தரம் குறை சொல்லும்படி இல்லை.

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்:





2011ல் இருந்த அதே 124.6 சிசி, கார்புரேட்டட் சிங்கிள் சிலிண்டர் DTSi இன்ஜினைக் கொண்டுள்ளது 2015 டிஸ்கவர் 125. பவர் மற்றும் டார்க் முறையே மாற்றமின்றி 11HP@8000RPM மறறும் 10.8NM@5500RPM என்ற அளவில் உள்ளது. ஆட்டோ சோக் இருப்பது வசதியாக உள்ளது. ஆரம்ப பிக்அப் மற்றும் மிட் ரேஞ்ச் பெர்ஃபாமென்ஸ் சிறப்பாக உள்ளது. மேலும் இன்ஜின் ஸ்முத்தாகவும், பவர் சீராகவும் வெளிப்படுகிறது. கிளட்ச் லைட்டாக இருப்பது, எளிதாக கியர் மாற்ற உதவுகிறது. பைக்கின் அதிகபட்ச வேகம் 100கிலோமீட்டர். ஆனால் 80 கிலோமீட்டர் வேகத்தை தாண்டியவுடன், பைக்கில் வைப்ரரேஷன் அதிகமாக இருக்கிறது. பைக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 165MM, போதுமான அளவில் உள்ளது.

ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை:






8 லிட்டர் பெட்ரோல் டெங்க், கால்களுக்கு நல்ல சப்போர்ட் அளிக்கிறது. புதிய 17 இன்ச் MRF டயர்கள், போதுமான கிரிப்பை அளிக்கிறது. வாகனத்தின் எடை 1 கிலோ உயர்ந்தாலும் [120.5 கிலோ], நகர டிராஃபிக்கில் பைக்கை வளைத்து நெளித்து ஓட்டும் வகையில் வடிவமைத்துள்ளது பஜாஜ். முன்பக்க டெலிஸ்கோபிக் மற்றும் பின்பக்க NITROX  கேஸ் சஸ்பேன்ஷன், மோசமான சாலைகளிலும் நல்ல ஓட்டுதல் தரத்தை அளிக்கிறது. முன்பக்க 200MM டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க 130MM டிரம் பிரேக் சிறப்பாக செயல்படு்கிறது.

மைலேஜ் மற்றும் விலை:






மேம்படுத்தப்பட்ட 125சிசி DTSi இன்ஜின், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 82.4 கிலோமீட்டர் துாரம் செல்லும் என்கிறது பஜாஜ். நமது நகர டிராஃபிக்கில், 55கிலோமிட்டர் மைலேஜ் கிடைக்கிறது. 2015 டிஸ்கவர் 125 பைக்கின் தமிழ்நாடு எக்ஸ் ஷோரும் விலை ரு. 53,100. குறைந்த விலைக்கு, 125சிசி பைக்கை தயாரித்து, இதே விலையில் கிடைக்கும் 110சிசி பைக்குகளுக்கு இடையே போட்டியை அதிகரித்திருக்கிறது பஜாஜ். டிஸ்கவர் எப்போதுமே நகரத்தில் தினசரி பைக் பயன்படுத்தும் மிடில் கிளாஸ் ஆண்களின் உற்ற துணையாக இருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.




No comments:

Post a Comment