ஹிரோ பேஷன் பிரோ, நமது நாட்டில் அதிகம் விற்பனையாகும் இரு சக்கர
வாகனங்களில் 3வது இடம் என்ற செய்தியே, இந்த பைக்கின் வெற்றி வரலாற்றை கூறி விடுகிறது.
2001ல் அறிமுகமான பேஷன், பெயருக்கு ஏற்றபடி கிராபிக்ஸ் மற்றும் கலர்கள் வாயிலாக தன்னை
அப்டேட் செய்துள்ளது. தற்போது 2015ல், மேம்படுத்தப்பட்ட வாகனத்தை களமிறக்கியுள்ளது
ஹிரோ.
மாற்றங்கள்:
முதலில் தெரிவது, 8 மேம்படுத்தப்பட்ட கலர்கள் மற்றும் புதிய கிராபிக்ஸ். புதிய ஹெட்லைட் டிசைன், ஸடார் சிட்டியை
நினைவுபடுத்துகிறது. புதிய இண்டிகேட்டர்கள்,
ஹோண்டா பைக்குகளில் இருப்பது போல உள்ளது. சைட் ஸ்டாண்டு இண்டிகேட்டர் சேர்க்கப்பட்டிருப்பது
நல்ல விஷயம். புதிய 13.5 லிட்டர் பெட்ரோல் டேங்க் டிசைன் நன்றாக உள்ளது. புதிய பாடி
பேனல்கள், பைக்கின் தோற்றத்தை பிரேஷ்ஷாக காட்டுகின்றன. புதிய அலாய் வீல் மற்றும் எக்ஸாஸ்ட்
டிசைன், பைக்கோடு பொருந்துகிறது. புதிய LED டெயில் லைட், இரவில் பார்ப்பதற்கு நன்றாக
உள்ளது. பாடி கலரில் உள்ள புதிய ரியர் வியு கண்ணாடிகள், பின்னால் வரும் வாகனங்களை தெளிவாக
காட்டுகிறது. 97.2சிசி சிங்கிள் சிலிண்டர், கார்புரேட்டட் APDV இன்ஜின், அதிக பிக்அப்
மற்றும் மைலேஜுக்காக டியுன் செய்யப்பட்டுள்ளது. பவர் மற்றும் டார்க் முறையே
8.36HP@8000RPM மற்றும் 8.05NM@5000RPM. புதிய 18 இன்ச் MRF டியுப்லேஸ் டயர்கள், நல்ல
கிரிப்பை அளிக்கின்றன. இந்த பைக்கின் சென்னை எக்ஸ் ஷோரும் விலை ரு. 49, 250 தொடங்கி
ரு. 54, 100 வரை செல்கிறது.
மாறாதது:
பைக்கின் நீள, அகல, உயர அளவுகளில் மாற்றமில்லை. 85 கிலோ மீட்டர்
அதிகபட்ச வேகம் மற்றும் 65 கிலோமீட்டர் மைலேஜ் கொண்ட இன்ஜின் ஸ்முத்தாக உள்ளது. பைக்கின்
பிரேக்கிங், ஒட்டுதல் தரம், கையாளுமை, நிலைத்ததன்மை மற்றும் தரம் ஆகியவை சிறப்பாக உள்ளன.
பைக்கின் சீட்டு, இருவர் வசதியாக அமரும் வகையில் உள்ளது. அனலாக் டிஜிட்டல் மீட்டர்கள்,
தெளிவாக இருக்கிறது. விலை அதிகமாகத் தோன்றினாலும், FILL IT, SHUT IT, FORGOT IT என்ற
கோட்பாடுக்கு ஏற்ப இவ்வவாகனம் வடிவமைக்கப் பட்டிருப்பதே, பைக்கின் இமாலய வெற்றிக்கு
காரணம் என்பதில் மாற்று கருத்தில்லை.
No comments:
Post a Comment