Tuesday, 28 July 2015

பஜாஜ் பல்ஸர் ரேஸ் ஸ்போர்ட் 200 [RS200]

பஜாஜ் பல்ஸர், 2001ல் இருந்து இந்திய மிடில் கிளாஸ் ஆண்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்த பைக்காக இருக்கிறது. யமஹா R15, ஹோண்டா CBR 150R என ஸ்டைலான போட்டியாளர்களால் விற்பனை இறங்கியது. மேலும் தனது குடும்பத்திற்குள்ளே [கேடிஎம் DUKE மற்றும் RC] போட்டி உண்டாவதை உணர்ந்த பஜாஜ், தான் இதுவரை இறங்காத ஃபுல் ஃபேரிங் பைக் செக்மெண்டில், பல்ஸர் ரேஸ் ஸ்போர்ட் 200 [RS200] என்ற பைக்கை தயாரித்து களமிறங்கியுள்ளது. அது எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.

டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள்:

பிரம்மாண்டமான ஃபுல் ஃபேரிங் பொருத்தப்பட்டுள்ள இந்த பைக்கின் முன்பக்கத்தில் புரொஜெக்ட்டர் ஹெட்லைட் மற்றும் LED பைலட் விளக்குகள் சேர்க்கப்பட்டுள்ளது. ரியர் வியூ கண்ணாடிகள் பின்னால் வரும் வாகனங்களைத் தெளிவாகக் காட்டுகின்றன. ஸ்பிளிட் சீட், 2 பீஸ் ஹேண்டில்பார், சைலன்ஸர் போன்றவை ரேஸ் பைக்குகளில் இருப்பதுபோன்று அருமையாக டிஸைன் செய்யப்பட்டிருக்கிறது. பின்பக்க டிஸைன் வித்தியாசமாக இருந்தாலும், டெயில் லைட் டிஸைன், பைக்கின் முன்பக்க பிரம்மாண்டத்தோடு பொருந்தவில்லை. தரமான அலாய் பாகங்கள் எடைக் குறைப்புக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்ஜின் கில் சுவிட்ச் உள்ளது. மேலும் அனலாக் ஆர்பிஎம் மீட்டரோடு டிரிப் மீட்டர், ஸ்பீடோ மீட்டர், ஃப்யூல் மீட்டர், கடிகாரம் டிஜிட்டலில் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஸுசுகி பைக்கில் உள்ளது போன்ற கியர் இண்டிகேட்டர் இல்லை. கைப்பிடிகள், BACKLIT சுவிட்ச்சுகள் தரமாக இருக்கின்றன. இந்த பைக்கின் பில்லியன் சீட் R15 மற்றும்    RC 200/390 ஆகியவற்றோடு ஒப்பிடும் போது வசதியாக உள்ளது. ஒட்டு மொத்தமாக வாகனத்தின் பெயின்ட், பினிஷ் மற்றும் கட்டுமானத் தரம் சிறப்பாக உள்ளது. வாகனத்தின் கிரவுண்ட்  கிளியரன்ஸ் 157MM, இன்ஜின் அடிபடாமல் இருக்க உதவுகிறது.

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்:
பல்ஸர் RS200 பைக்கில் இருப்பது, பல்ஸர் NS200 பைக்கில் இருந்த அதே சிங்கிள் சிலிண்டர் மற்றும் லிக்விட் கூல்டு இன்ஜினைக்கொண்டுள்ளது. மேலும் NS200 பைக்கைவிட [145 கிலோ]  RS 200 பைக்கின் எடை 20 கிலோ அதிகம். அதனால் பஜாஜ் கார்புரேட்டருக்கு பதிலாக ஃப்யூல் இன்ஜெக்ட்ஷனைச் சேர்த்து பவரை அதிகரித்திருக்கிறது. பவர் 9,750 rpm-ல் 24.5bhp சக்தியை வெளிப்படுத்துகிறது மற்றும் 8,000 ஆர்பிஎம்-ல் 1.86kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இதனால் இன்ஜினில் இருந்து பவர் ஒரே சீராக ரெஸ்பான்ஸிவாக வெளிப்படுகிறது. மேலும் ஆக்ஸிலரேட்டரை முறுக்கினால் நல்ல சத்தத்தோடு இன்ஜின் நன்றாக ரெவ் ஆகிறது. லைட்டான கிளட்ச் 6 கியர்களையும் எளிதாக மாற்றுவதற்கு உதவுகிறது. இன்ஜின் ஸ்முத்தாக இயங்குவதால் வைப்ரேஷன் கன்ட்ரோல் செய்யப்பட்டுள்ளது. பல்ஸர் RS200 பைக்கின் அதிகபட்ச வேகம் 141 கிலோ மிட்டர்.

ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை:
சிட்டி டிராபிக் மற்றும் நெடுஞ்சாலையில் வசதியாக பயன்படுத்தும் வகையில் வாகனத்தை வடிவமைத்துள்ளது பஜாஜ். சீட்டிங் பொசிஷன் ஸ்போர்ட்டியாகவும், தினமும் நகருக்குள் ஓட்டுவதற்கு ஏற்ப கொஞ்சம் உயரமாகவும் இருக்கிறது. 13லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரொல் டேங்க் கால்களுக்கு நல்ல சப்போர்ட் அளிக்கிறது. 17 இன்ச் MRF டியுப்லேஸ் டயர்கள் நல்ல கிரிப்பை அளிக்கிறது. முன்பக்க டெலிஸ்கோபிக் மற்றும் பின்பக்க நைட்ராக்ஸ் மோனொஷாக் ஸ்பிரிங் சஸ்பென்ஷன் மோசமான சாலைகளிலும் நல்ல ஓட்டுதல் தரத்தையும் நிலைத்ததன்மையும் அளிக்கிறது. அதிக வேகங்களில் வாகனத்தின் கையாளுமை நன்றாக வளைவுகளில் வளைத்து நெளித்து ஓட்டும் வகையில் சிறப்பாக மேம்பட்டுள்ளது. ஆனால், இன்ஜின் அதிகமாக சூடாவதோடு, இன்ஜின் சூடு சீட் வரை வருகிறது. RS 200 பைக்கில் முன்பக்கம் 300 மிமீ டிஸ்க் பிரேக்கையும், பின்பக்கம் 230 மிமீ டிஸ்க் பிரேக்கையும் கொண்டுள்ளது. மேலும் ஆஃப் செய்ய முடியாத முன்பக்க ஏபிஎஸ் பிரேக் ஆப்ஷனாகக் கொடுக்கப்பட்டள்ளது. அதனால் ஏபிஎஸ் பிரேக் கொண்ட பல்ஸர் பிரேக்கிங்கில் அசத்துகிறது.

மைலேஜ் மற்றும் விலை:
நமது சிட்டி டிராபிக்கில் , ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு RS 200 பைக், அதிகரிக்கப்பட்ட வாகனத்தின் எடை காரணமாக 32 கிலோ மிட்டர் மைலேஜ் கிடைக்கிறது. சென்னையில் இவ்வாகனங்களின் எக்ஸ் ஷோரும் விலை RS 200 ABS: ரு.132,694 மற்றும் RS 200 NON-ABS: ரு.120,486. இதன் முலம் போட்டியாளர்களை விட குறைந்த விலையில் நல்ல வாகனத்தை தயாரிக்க முடியும் என்று மிண்டும் ஒரு முறை பஜாஜ் நிருபித்து இருக்கிறது. மேலும் போட்டியாளர்களை விட அதிக சிறப்பம்சங்கள் மற்றும் பெர்ஃபாமென்ஸ், நகருக்குள் தினமும் ஓட்டுவதற்கு ஏற்ப ஈஸியான பைக்காக இருக்கிறது.

Saturday, 25 July 2015

2015 பஜாஜ் பல்சர் 200AS மற்றும் 2015 பஜாஜ் பல்ஸர் AS 150


பஜாஜ் பல்சர், 2001ல் இருந்து இந்திய மிடில் கிளாஸ் ஆண்களின் குதிரை என்றால் அது மிகையாகாது. ஏனேன்றால் ஒரு ஸ்போர்ட்ஸ் பைக்கிற்கு தேவையான பவர், ஹேண்ட்லிங், சிறப்பம்சங்கள் தவிர மைலேஜ், குறைந்த விலை மற்றும் மெயின்டனென்ஸ் என்று ஆல்ரவுண்டராக இருந்ததால், விற்பனை எகிறியது. ஆனால் யமஹா FZ மற்றும் பேஸர், ஹோண்டா யுனிகார்ன், டிவிஎஸ் அப்பாச்சி, ஸுசுகி ஜிக்ஸர் மற்றும் SF என போட்டியாளர்கள் அதிகரிக்க, விற்பனை இறங்கியது. அதனால் பஜாஜ் 2015ல், ADVENTURE SPORTS ஏனும் புதிய ரக வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வாருங்கள் அதன் சாதக பாதகங்களை பார்ப்போம்.

டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள்:

2012ல் வெளியான பல்சர் 200NS பைக்கை அடிப்படையாகக் கொண்டு, பல்சர் 150AS மற்றும் பல்சர் 200AS பைக்குகளை வடிவமைத்துள்ளது பஜாஜ். புதிதாக குவார்ட்டர் பேரிங் சேர்க்கப்பட்டு, அதில் உயரமான வைசர், புரொஜெக்டர் ஹெட்லாம்ப் மற்றும் LED பார்க்கிங் லைட்கள் உள்ளன. அதைத் தவிர பெரிய மாற்றங்கள் இல்லையென்றாலும், இவையனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட விதம் சிறப்பாக உள்ளது. தரமான அலாய் பாகங்கள் எடைக் குறைப்புக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இரு வாகனத்தின் நிலம், அகலம், உயரம் ஒன்றுதான் . சைட் மிரர், இன்ஜின், அலாய் வில்கள், எக்ஸாஸ்ட் கறுப்பு நிறத்தில் உள்ளன ரியர் வியூ கண்ணாடிகள் பின்னால் வரும் வாகனங்களைத் தெளிவாகக் காட்டுகின்றன. ஸ்பிளிட் சீட், 2 பீஸ் ஹேண்டில்பாரில் இன்ஜின் கில் சுவிட்ச் உள்ளது. அனலாக் ஆர்பிஎம் மீட்டரோடு டிரிப் மீட்டர், ஸ்பீடோ மீட்டர், ஃப்யூல் மீட்டர், கடிகாரம் டிஜிட்டலில் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஸுசுகி பைக்கில் உள்ளது போன்ற கியர் இண்டிகேட்டர் இல்லை. கைப்பிடிகள், BACKLIT சுவிட்ச்சுகள் தரமாக இருக்கின்றன. இந்த பைக்கின் பில்லியன் சீட் வசதியாக உள்ளது. பின்பக்க டிஸைன், அதுவும் டெயில் லைட் டிஸைன் அப்படியே பல்ஸர் 200NS தான். ஒட்டு மொத்தமாக வாகனத்தின் பெயின்ட், பினிஷ் மற்றும் கட்டுமானத் தரம் சிறப்பாக உள்ளது.

இன்ஜின் பெர்பாமென்ஸ்:

பல்ஸர் AS200 பைக்கில் இருப்பது, பல்ஸர் NS200 பைக்கில் இருந்த அதே கார்புரேட்டட் மற்றும் லிக்விட் கூல்டு இன்ஜினைக்கொண்டுள்ளது. மேலும் NS200 பைக்கைவிட [145 கிலோ]  AS 200 பைக்கின் எடை 8 கிலோ அதிகம் [153கிலோ]. பவர் 9,500 rpm-ல் 23.52bhp சக்தியை வெளிப்படுத்துகிறது மற்றும் 8,000 ஆர்பிஎம்-ல் 1.83kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. ஆனால் பல்ஸர் AS 150ல், புதிய 149.5 சிசி ஏர் கூல்ட் மற்றும் கார்புரேட்டட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பவர் 9,500 rpm-ல் 17bhp சக்தியை வெளிப்படுத்துகிறது மற்றும் 7,000 ஆர்பிஎம்-ல் 1.3kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. AS 200 பைக்கின் எடையை விட 10கிலோ குறைவு. இரு இன்ஜினில் இருந்து பவர் ஒரே சீராக ரெஸ்பான்ஸிவாக வெளிப்படுகிறது. மேலும் ஆக்ஸிலரேட்டரை முறுக்கினால் நல்ல சத்தத்தோடு இன்ஜின் நன்றாக ரெவ் ஆகிறது. லைட்டான கிளட்ச் 6 கியர்களையும் எளிதாக மாற்றுவதற்கு உதவுகிறது. இன்ஜின் ஸ்முத்தாக இயங்குவதால் வைப்ரேஷன் கன்ட்ரோல் செய்யப்பட்டுள்ளது. பல்ஸர் AS200 பைக்கின் அதிகபட்ச வேகம் 135 கிலோ மிட்டர் மற்றும் பல்ஸர் AS150 பைக்கின் அதிகபட்ச வேகம் 115 கிலோ மிட்டர்.

ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை:

வாகனத்தின் கிரவுண்ட்  கிளியரன்ஸ் 170MM, இன்ஜின் அடிபடாமல் இருக்க உதவுகிறது. சிட்டி டிராபிக் மற்றும் நெடுஞ்சாலையில் வசதியாக பயன்படுத்தும் வகையில் வாகனத்தை வடிவமைத்துள்ளது பஜாஜ். சீட்டிங் பொசிஷன் ஸ்போர்ட்டியாகவும், தினமும் நகருக்குள் ஓட்டுவதற்கு ஏற்ப கொஞ்சம் உயரமாகவும் இருக்கிறது. 12லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரொல் டேங்க் கால்களுக்கு நல்ல சப்போர்ட் அளிக்கிறது. 17 இன்ச் MRF டியுப்லேஸ் டயர்கள் போதுமான கிரிப்பை அளிக்கிறது. முன்பக்க டெலிஸ்கோபிக் மற்றும் பின்பக்க நைட்ராக்ஸ் மோனொஷாக் ஸ்பிரிங் சஸ்பென்ஷன் மோசமான சாலைகளிலும் நல்ல ஓட்டுதல் தரத்தையும் நிலைத்ததன்மையும் அளிக்கிறது. அதிக வேகங்களில் வாகனத்தின் கையாளுமை பழைய பல்ஸரோடு ஒப்பிடும் போது நன்றாக வளைவுகளில் வளைத்து நெளித்து ஓட்டும் வகையில் மேம்பட்டுள்ளது. AS 200 பைக்கில் முன்பக்கம் 280 மிமீ டிஸ்க் பிரேக்கையும், பின்பக்கம் 230 மிமீ டிஸ்க் பிரேக்கையும் கொண்டுள்ளது மற்றும் AS 150 பைக்கில் முன்பக்கம் 240 மிமீ டிஸ்க் பிரேக்கையும், பின்பக்கம் 130 மிமீ டிரம் பிரேக்கையும் கொண்டுள்ளது. AS 150 பைக்கின் மைனஸ் பிரேக்ஸ் தான். மேலும் ஏபிஎஸ் பிரேக் ஆப்ஷனாகக் கூட இல்லை.

மைலேஜ் மற்றும் விலை:

நமது சிட்டி டிராபிக்கில் , ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு முறையே AS 200 பைக் 35 கிலோ மிட்டர் மற்றும் AS 150 பைக் 45 கிலோ மிட்டர் மைலேஜ் கிடைக்கிறது. சென்னையில் இவ்வாகனங்களின் எக்ஸ் ஷோரும் விலை AS 200: ரு. 93,568 மற்றும் AS 150: ரு. 80,794. இதன் முலம் போட்டியாளர்களை விட குறைந்த விலையில் நல்ல வாகனத்தை தயாரிக்க முடியும் என்று பஜாஜ் நிருபித்து இருக்கிறது.

Tuesday, 21 July 2015

2015 பஜாஜ் பிளாட்டினா


பஜாஜ் பிளாட்டினா 2006ஆம் ஆண்டில் அறிமூகம் செய்யப்பட்டது. நல்ல மைலேஜ், குறைந்த விலை மற்றும் மெயின்டனென்ஸ் என பல சிறப்புகள் இருந்தாலும், அதிக போட்டியாளர்களின் வரவால் விற்பனை குறைந்தது. தற்போது 2015ல், காலத்திற்கேற்ற மாற்றங்களை வாகனத்தில் செய்துள்ளதாக பஜாஜ் கூறுகிறது. அது என்ன என்பதை பார்ப்போம்.

டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள்:


முதலில் தெரியும் மாற்றம், கிராபிக்ஸ் மற்றும் 3 கலர் ஆப்ஷன்கள். வைசர் மற்றும் கிராப் ரெயில் வாகனத்தின் நிறத்தில் உள்ளன. வாகனத்தின் நிலம், அகலம், உயரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சைட் மிரர், இன்ஜின், அலாய் வில்கள், எக்ஸாஸ்ட் கறுப்பு நிறத்தில் உள்ளன. புதிதாக செல்ப் ஸடார்ட் மற்றும் மெயின்டனென்ஸ் குறைந்த பேட்டரி சேர்க்கப்பட்டுள்ளது. சைட் பேனல்கள்  மற்றும் எக்ஸாஸ்ட் டிசைன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மாறாதது என்றால், வாகனத்தின் லைட் டிசைன்கள் மற்றும் ஸ்டியரிங் அமைப்பு. மேலும் இண்டிகேட்டர்கள் வென்பனி நிறத்தில் இல்லாமல் ஆரஞ்ச் நிறத்தில் இருப்பது, பார்ப்பதற்கு நன்றாக இல்லை. ஒட்டு மொத்தமாக வாகனத்தின் பெயின்ட், பினிஷ் மற்றும் கட்டுமானத் தரம் உயர்ந்துள்ளது.

இன்ஜின் பெர்பாமென்ஸ்:

டிஸ்கவர் 100M பைக் இன்ஜினில் சில மாற்றங்களை செய்து, புதிய பிளாட்டினாவில் வெளியிட்டுள்ளது பஜாஜ். பவர் மற்றும் டார்க் முறையே 8.2HP@7500RPM மற்றும் 8.6NM@5000RPM என்ற அளவில் உள்ளது. இரட்டை ஸ்பார்க் பிளக் மற்றும் வால்வுகள் கொண்ட இன்ஜின் ஸ்முத்தாக இயங்குகிறது. லைட்டான கிளட்ச் 4 கியர்களையும் எளிதாக மாற்றுவதற்கு உதவுகிறது. 60கிலோமிட்டர் வேகத்தை விரைவாக எட்டும் இன்ஜின், 80 கிலோமிட்டர் வேகத்தை எட்டியவுடன் வாகனத்தில் அதிர்வுகள் தெரிகிறது. வாகனத்தின் அதிகபட்ச வேகம் 90கிலோமிட்டர். வாகனத்தின் கிரவுண்ட்  கிளியரன்ஸ் 190MM, இன்ஜின் அடிபடாமல் இருக்க உதவுகிறது.

ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை:


சிட்டி டிராபிக்கில் எளிதாக பயன்படுத்தும் வகையில் வாகனத்தை வடிவமைத்துள்ளது பஜாஜ்.அதிகரிக்கப்பட்ட 11.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரொல் டேங்க் கால்களுக்கு நல்ல சப்போர்ட் அளிக்கிறது. மேம்படுத்தப்பட்ட சேஸி அமைப்பு வாகனத்தின் எடையை 108கிலோ என்ற அளவில் குறைக்க உதவி இருக்கிறது. ஆனால் இதுவே வாகனத்தின் நிலைத்த தன்மையை அதிக வேகங்களில் குறைத்துவிடுகிறது. டயர்கள் போதுமான கிரிப்பை அளிக்கிறது. முன்பக்க டெலிஸ்கோபிக் மற்றும் பின்பக்க SNS சஸ்பென்ஷன் மோசமான சாலைகளிலும் நல்ல ஓட்டுதல் தரத்தை அளிக்கிறது. குறை என்னவேன்றால் முன்பக்க டிஸ்க் பிரேக் மற்றும் டியுப்லேஸ் டயர்கள் இல்லை. மேலும் முன்பக்க மற்றும் பின்பக்க 110MM டிரம் பிரேக்குகள் போதுமானதாக இல்லை.

மைலேஜ் மற்றும் விலை:

ஓரு லிட்டர் பெட்ரோலுக்கு 96.9கிலோமிட்டர் துாரம் செல்லும் என்கிறது பஜாஜ். ஆனால் நமது சிட்டி டிராபிக்கில் 70கிலோமிட்டர் மைலேஜ் கிடைக்கிறது. சென்னையில் இவ்வாகனத்தின் எக்ஸ் ஷோரும் விலை ரு.45,804. இந்த விலைக்கு மேம்படுத்தப்பட்ட பிளாட்டினா நிச்சயம் அதன் போட்டியாளர்களை விட நல்ல வாகனமாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

Wednesday, 4 September 2013

BMW 1 series




 
              BMW has launched the much awaited 1 series in India yesterday. Instead of going head-on against the likes of the A-class and V40 with dramatic styling, the 1-series has chosen to do things the traditional BMW way: Pure Driving Pleasure. A rear wheel driven drive-train format with the perfect electric power steering and agile body control make for oodles of fun behind the wheel. A 1.6 litre turbo petrol and a 2.0 litre diesel from the 3-series and 5-series round up the engine options. The petrol with a power rating of 136 BHP and the diesel with 143 BHP make for class rivalling figures considering the A-class diesel has only 107 BHP. Interiors seem a direct lift off the 3-series with all sorts of gimmicky features available on the top-end diesel, the petrol being available only on the base version.  Make no mistake, this is one of the driving BMWs around with interior quality living up to the brand value. This then is what all you driving enthusiasts out there like me should be pinning up on their wish lists.