Friday, 4 September 2015

2015 பியாஜியோ வெஸ்பா VXL 125 மற்றும் SXL 125




பியாஜியோ வெஸ்பா,  இந்திய ஸ்கூட்டர் சந்தையில் தனக்கென ஒரு புதிய பாதையை 2012ல் உருவாக்கியது. ரெட்ரோ ஸ்டைல், க்ரோம் ஃபினிஷ், டிஜிட்டல் கடிகாரம், 10.06 HP சக்தி வாய்ந்த 3 வால்வு 125 சிசி இன்ஜின், டியுப்லேஸ் டயர்கள் கொண்ட அலாய் வில்கள், மெயின்டனென்ஸ் FREE பேட்டரி, முன்பக்க 200MM டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க 140MM டிரம் பிரேக், மோனோகாக் ஸ்டில் பாடி, 8.5 லிட்டர் பெட்ரோல் டேங்க், DC லைட்ஸ், ஆர்ட் லெதர் சீட்டுகள் அடியில் 21 லிட்டர் கொள்ளளவு இடம் என பல வசதிகளைக் கொண்டிருந்தாலும், அதிக விலை மற்றும் குறைவான டிலர் நெட்வோர்க் போன்ற காரணங்களால் விற்பனை சிறப்பாக இல்லை. தற்போது 2015ல், ஏற்கனவே விற்பனையில் உள்ள வெஸ்பா ஸ்கூட்டரை, மேம்படுத்தியுள்ளது பியாஜியோ.

மாற்றங்கள்:
















முதலில் தெரிவது 6 புதிய கலர்கள் மற்றும் அகலமான முன்பக்க 11 இன்ச் மற்றும் பின்பக்க 10 இன்ச் டியுப்லேஸ் டயர்கள். வெஸ்பா VX மற்றும் S மாடலை அடிப்படையாகக் கொண்டு, VXL 125 மற்றும் SXL 125 வடிவமைத்துள்ளது பியாஜியோ. ஆரஞ்ச் BACKLITல் ஸ்பிடோ மீட்டர், 2 டிரிப் மீட்டர், பியுல் கேஜ், கிளாக் என அனைத்தும் டிஜிட்டலில் தெளிவாக இருப்பது சிறப்பு. முன்பக்க கிரில் டிசைன் மாறியுள்ளது. மேலும் 2 பேர் அமர்வதற்கு ஏற்ற சொகுசான புதிய இருக்கைகள் உள்ளன. இவ்வாகனத்தின் புனே எக்ஸ் ஷோரும் விலை ரு.77,308 மற்றும் ரு.81,967.

மாறாதது:


















ஸ்கூட்டரின் நீள, அகல, உயர அளவுகள் மற்றும் எடையில் மாற்றமில்லாதது நல்ல விஷயம். 95கிலோ மீட்டர் அதிகபட்ச வேகம் மற்றும் 45 கிலோ மீட்டர் மைலேஜ் கொண்ட ஸ்முத்தான 125 சிசி இன்ஜினில், பியுவல் இன்ஜெக்ஷன் டெக்னாலஜி இல்லாதது மைனஸ். ஆனால் ஸ்கூட்டரின் பிரேக்கிங், கையாளுமை, ஒட்டுதல் தரம், நிலைத்ததன்மை, தரம் ஆகியவை நிறைவாக உள்ளது. இந்த விலைக்கு கிளவ் பாக்ஸ், முன்பக்க டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் மற்றும் பிரேக் லாக் கிளாம்ப் இல்லாதது அதிர்ச்சியாக உள்ளது. ஆனால், இன்ஜின் மற்றும் டிசைன் விஷயத்தில் நம்மை ஏமாற்றவில்லை பியாஜியோ.





No comments:

Post a Comment