இந்திய இரு சக்கர வாகன சந்தையானது, பவர்புல் 2 ஸ்ட்ரோக் பைக்குகளில்
இருந்து நல்ல மைலேஜ் தரும் 4 ஸ்ட்ரோக் பைக்குகளுக்கு மாறி கொண்டிருந்த காலமது.
1999ல், ஹிரோ ஹோண்டா நிறுவனம் 156.8 சிசி
CBZ பைக்கை அறிமுகப்படுத்தியது. சொகுசு, ஸ்டைல், பிக்அப், சிறப்பம்சங்கள், ஹேண்ட்லிங்
என போட்டியாளர்களை விட முன்னனியில் இருந்ததால், புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டது.
ஆனால் பஜாஜ் பல்ஸர், யமஹா FZ , ஹோண்டா யுனிகார்ன், டிவிஎஸ் அப்பாச்சி, சுசுகி ஜிக்ஸர்
என போட்டியாளர்கள் அதிகரிக்க, 2005ல் ஆட்டம் கண்டது CBZ . 2007 முதல் எவ்வுளவு முயற்சித்தும்,
ஹிரோவால் 100சிசி பைக்குகளால் பெற்ற வெற்றியை, 150சிசி பைக்குகளில் பெற முடியவில்லை.
அதனால் 2015ல், ஹிரோ எக்ஸ்ட்ரிம் ஸ்போர்ட்ஸ் என்ற புதிய வாகனத்தை களமிறக்கியுள்ளது.
வாருங்கள் அதன் சாதக பாதகங்களை பார்ப்போம்.
டிசைன் மற்றும்
சிறப்பம்சங்கள்:
முதலில்
தெரிவது, ஷார்ப்பான கோடுகள் கொண்ட பைக்கின் டிசைன். புதிய LED பார்க்கிங் லைட்கள்
கொண்ட ஹெட்லாம்ப், பார்ப்பதற்கு நன்றாக உள்ளது. மற்றபடி ஃபேண்டர், பெட்ரோல் டேங்க்,
ஸ்பிளிட் சீட், இன்ஸ்ட்ருமெண்ட், எக்ஸாஸ்ட் என பல பாகங்கள், 2011ல் இருந்த எக்ஸ்ட்ரிம்
பைக்கில் இருப்பது போல உள்ளது. பாடி கலரில் உள்ள ரியர் வியூ கண்ணாடிகள் பின்னால் வரும்
வாகனங்களைத் தெளிவாகக் காட்டுகின்றன. முழுக்க கவர் செய்யப்பட்டுள்ள செயின், இந்த பைக்கின்
தோற்றத்திற்கு செட் ஆகவில்லை. அலாய் வீல்கள், சைட் பேனல்கள் மற்றும் டெயில் லைட் டிஸைன்
தற்போதைய எக்ஸ்ட்ரிம் பைக்கில் இருந்து பெறப்பட்டுள்ளது. 2 பீஸ் ஹேண்டில்பாரில் இன்ஜின்
கில் சுவிட்ச் இல்லாதது மைனஸ். மேலும் சாவி துவாரம் வலது இண்டிகேட்டர் அருகில் இருப்பது
பயன்படுத்த வசதியாக இல்லை. கைப்பிடிகள், சுவிட்ச்சுகள் தரமாக இருக்கின்றன. இந்த பைக்கின்
சீட் வசதியாக உள்ளது. ஒட்டு மொத்தமாக வாகனத்தின் பெயின்ட், பினிஷ் மற்றும் கட்டுமானத்
தரம் சிறப்பாக உள்ளது.
இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்:
ஹிரோ எக்ஸ்ட்ரிம் ஸ்போர்ட்ஸ் பைக்கில் இருப்பது சிங்கிள் சிலிண்டர்
மற்றும் கார்புரேட்டர் கொண்ட 149.2 சிசி இன்ஜினைக்கொண்டுள்ளது. பவர் 15.6 bhp சக்தியை
8,500 ஆர்பிஎம்மிலும், 1.35 kgm டார்க்கை 7,000 ஆர்பிஎம்மிலும் அளிக்கிறது. இன்ஜினில்
இருந்து பவர் ஒரே சீராக ரெஸ்பான்ஸிவாக வெளிப்படுகிறது. லைட்டான கிளட்ச் 5 கியர்களையும்
எளிதாக மாற்றுவதற்கு உதவுகிறது. இன்ஜின் ஸ்முத்தாக இயங்குவதால் ஒரளவிற்கு வைப்ரேஷன்
கன்ட்ரோல் செய்யப்பட்டுள்ளது. ஹிரோ எக்ஸ்ட்ரிம் ஸ்போர்ட்ஸ் பைக்கின் அதிகபட்ச வேகம்
115 கிலோ மிட்டர். மேலும் வாகனத்தின் கிரவுண்ட்
கிளியரன்ஸ் 163MM, இன்ஜின் அடிபடாமல் இருக்க உதவுகிறது.
ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை:
சிட்டி
டிராபிக் மற்றும் நெடுஞ்சாலையில் வசதியாக பயன்படுத்தும் வகையில் வாகனத்தை வடிவமைத்துள்ளது
ஹிரோ. சீட்டிங் பொசிஷன் கொஞ்சம் ஸ்போர்ட்டியாகவும், தினமும் நகருக்குள் ஓட்டுவதற்கு
ஏற்ப உயரமாகவும் இருக்கிறது. 12லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரொல் டேங்க் கால்களுக்கு
நல்ல சப்போர்ட் அளிக்கிறது. அதிக வேகங்களில் வாகனத்தின் கையாளுமை நன்றாக இருக்கிறது.
18 இன்ச் MRF டியுப்லேஸ்
டயர்கள் போதுமான கிரிப்பை அளிக்கிறது. முன்பக்க டெலிஸ்கோபிக் மற்றும் பின்பக்க கேஸ்
ஸ்பிரிங் சஸ்பென்ஷன் மோசமான சாலைகளிலும் நல்ல ஓட்டுதல் தரத்தையும்
நிலைத்ததன்மையும் அளிக்கிறது. ஹிரோ எக்ஸ்ட்ரிம் ஸ்போர்ட்ஸ் பைக்கில் முன்பக்கம்
240 மிமீ டிஸ்க் பிரேக்கையும், பின்பக்கம் 130 மிமீ டிரம் பிரேக்கையும் கொண்டுள்ளது.
ஆனால் ஆப்ஷனாகக் கொடுக்கப்பட்டள்ள பின்பக்க 220 மிமீ டிஸ்க் பிரேக் நம்பிக்கையை அளிக்கிறது.
வாகனத்தின் அதிக எடை [147கிலோ] வளைத்து நெளித்து ஓட்டுவதற்கு இடைஞ்சலாக இருக்கிறது.
மைலேஜ் மற்றும் விலை:
நமது
சிட்டி டிராபிக்கில் , ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 45 கிலோ மிட்டர் மைலேஜ் கிடைக்கிறது.
சென்னையில் இவ்வாகனத்தின் எக்ஸ் ஷோரும் விலை ரு. 71, 629 மற்றும் பின்பக்க டிஸ்க் பிரேக்
கொண்ட பைக்கின் எக்ஸ் ஷோரும் விலை ரு. 74, 829. இந்த விலைக்கு புதிய ஹிரோ எக்ஸ்ட்ரிம்
ஸ்போர்ட்ஸ் பைக், நகருக்குள் தினமும் ஓட்டுவதற்கு ஏற்ப பிராக்ட்டிக்கல் பைக்காக இருக்கிறது.
ஆனால் போட்டியாளர்கள் போலஅப்டேட்டாக இல்லை என்பதே இதன் மைனஸ். மேலும் பெயருக்கேற்றபடி
ஸ்போர்ட்டியாக இல்லை.
No comments:
Post a Comment