ஹோண்டா ஷைன், நமது நாட்டில் அதிகம் விற்பனையாகும் இரு சக்கர
வாகனங்களில் 5வது இடம் என்ற செய்தியே, இந்த பைக்கின் வெற்றி வரலாற்றை கூறி விடுகிறது.
2006ல் அறிமுகமான ஷைன், பெயருக்கு ஏற்றபடி கிராபிக்ஸ் மற்றும் கலர்கள் வாயிலாக தன்னை
அப்டேட் செய்துள்ளது. தற்போது 2015ல், மேம்படுத்தப்பட்ட வாகனத்தை களமிறக்கியுள்ளது
ஹோண்டா.
மாற்றங்கள்:
முதலில் தெரிவது, 4 புதிய கலர்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட
கிராபிக்ஸ். புதிய ஹெட்லைட் டிசைன், ஹிரோ ஹங்க்கை நினைவுபடுத்துகிறது. புதிய 10.5 லிட்டர்
பெட்ரோல் டேங்க் டிசைன் நன்றாக உள்ளது. மெயின்டனென்ஸ்
FREE பேட்டரி சேர்க்கப்பட்டுள்ளது சிறப்பு. புதிய பாடி பேனல்கள், பைக்கின்
தோற்றத்தை பிரேஷ்ஷாக காட்டுகின்றன. புதிய அலாய் வீல் மற்றும் டெயில் லைட் டிசைன், பைக்கோடு
பொருந்துகிறது. புதிய 18 இன்ச் MRF டியுப்லேஸ் டயர்கள், நல்ல கிரிப்பை அளிக்கின்றன.
கிராப் ரெயில் பாடி கலருக்கு மாறியுள்ளது. புதிய 5 வகை ADJUSTABLE ஸ்பிரிங் சஸ்பேன்ஷன், நல்ல ஓட்டுதல் தரத்தை அளிக்கிறது. 124.7சிசி சிங்கிள் சிலிண்டர், கார்புரேட்டட்
HET இன்ஜின், அதிக பிக்அப் மற்றும் மைலேஜுக்காக டியுன் செய்யப்பட்டுள்ளது. பவர் மற்றும்
டார்க் முறையே 10.57HP@7500RPM மற்றும் 10.30NM@5500RPM. இந்த பைக்கின் சென்னை ஆன்
ரோடு விலை ரு. 65, 173 தொடங்கி ரு. 71, 547 வரை செல்கிறது. மேலும் கம்பைண்டு பிரேக்கிங்
சிஸ்டம் ஆப்ஷனாகக் கொடுக்கப்பட்டள்ளது.
மாறாதது:
பைக்கின் நீள, அகல, உயர அளவுகளில் மாற்றமில்லை. 95 கிலோ மீட்டர்
அதிகபட்ச வேகம் மற்றும் 55 கிலோமீட்டர் மைலேஜ் கொண்ட இன்ஜின் ஸ்முத்தாக உள்ளது. பைக்கின்
பிரேக்கிங், ஒட்டுதல் தரம், கையாளுமை, நிலைத்ததன்மை மற்றும் தரம் ஆகியவை சிறப்பாக உள்ளன.
பைக்கின் சீட்டு, இருவர் வசதியாக அமரும் வகையில் உள்ளது. புதிய அனலாக் மீட்டர்கள் தெளிவாக
இருந்தாலும், பினிக்ஸ் போல டிஜிட்டல் மீட்டர்கள் இல்லாதது மைனஸ். 5 ஸ்பிட் கியர்பாக்ஸை
சேர்த்திருக்கலாம். விலை அதிகமாகத் தோன்றினாலும், குறைவான மெயின்டனென்ஸ் மற்றும் நல்ல
ரீசேல் மதிப்பு என்ற கோட்பாடுக்கு ஏற்ப இவ்வவாகனம் வடிவமைக்கப் பட்டிருப்பதே, பைக்கின்
இமாலய வெற்றிக்கு காரணம் என்பதில் மாற்று கருத்தில்லை.
No comments:
Post a Comment