ஸ்கூட்டர் என்பது நடுத்தர வயது பெண்கள் மற்றும் ஆண்களை மனதில்
வைத்து தயாரிக்கப்பட்டவை. ஆனால் இளம் வயதினரும் தற்போது அதிகளவில் ஸ்கூட்டரை உபயோகிப்பதால்
ஹோண்டா டியோ மற்றும் ஆக்டிவா ஐ, மஹிந்திரா ரோடியோ, டிவிஎஸ் ஸ்கூட்டி மற்றும் விகோ,
யமஹா ஃபாஸினோ மற்றும் ரே, ஹிரோ பிளஷர், சுசுகி லேட்ஸ், பியாஜியோ வெஸ்பா போன்ற வாகனங்கள்
களம் கண்டன. தற்போது 2015ல், ஏற்கனவே விற்பனையில் உள்ள ஸ்விஷ் ஸ்கூட்டரை, மேம்படுத்தியுள்ளது
சுசுகி.
மாற்றங்கள்:
முதலில் தெரிவது 4 புதிய கலர்கள் மற்றும் கிராபிக்ஸ். புதிய
10 இன்ச் MRF டியுப்லேஸ் டயர்கள் போதுமான கிரிப்பை அளிக்கின்றன. மெயின்டனென்ஸ்
FREE பேட்டரி சேர்க்கப்பட்டுள்ளது சிறப்பு. ஆரஞ்ச் BACKLITல் ஸ்பிடோ மீட்டர், 2 டிரிப்
மீட்டர், பியுல் கேஜ், கிளாக் என அனைத்தும் டிஜிட்டலில் தெளிவாக இருப்பது சிறப்பு.
BLUE பார்க்கிங் லேம்ப் கொண்ட DC ஹெட்லைட் நல்ல வெளிச்சம் தருகிறது. முன்பக்க
STEEL ஃபேண்டர், தரமாக உள்ளது. இந்த ஸ்கூட்டரின் சென்னை ஆன் ரோடு விலை ரு. 62, 705.
மாறாதது:
ஸ்கூட்டரின் நீள, அகல, உயர அளவுகள் மற்றும் எடையில் மாற்றமில்லாதது
நல்ல விஷயம். 90கிலோ மீட்டர் அதிகபட்ச வேகம் மற்றும் 45 கிலோ மீட்டர் மைலேஜ் கொண்ட
ஸ்முத்தான 124 சிசி இன்ஜினில், SEP டெக்னாலஜி இல்லாதது மைனஸ். மேலும் அலாய் வில்கள்
மற்றும் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் இல்லை. ஆனால் ஸ்கூட்டரின் பிரேக்கிங், கையாளுமை, ஒட்டுதல்
தரம், நிலைத்ததன்மை, தரம் ஆகியவை நிறைவாக உள்ளது. கிளவ் பாக்ஸ் இல்லாதது அதிர்ச்சியாக
உள்ளது. மேற்கண்ட ஸ்கூட்டரை பார்த்து சலித்தவர்களுக்கு, இந்த ஸ்கூட்டர் மாற்றாக அமையும்
என்பதே உண்மை. ஏனேன்றால், 2 பேர் அமர்வதற்கு ஏற்ற சொகுசான இருக்கைகள், 160MM கிரவுண்ட்
கிளியரன்ஸ், ஹெல்மெட் ஒன்றை வைத்துக்கொள்ளக் கூடிய அளவுக்கு 20 லிட்டர் கொள்ளளவு இடவசதி,
மிட் ரேஞ்ச் இன்ஜின் பெர்பாமென்ஸ், முன்பக்க டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன், 6 லிட்டர் பெட்ரோல்
டேங்க், கால்கள் வைப்பதற்கு நிறைய இடம் என பிராக்டிக்கலான வாகனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment