பஜாஜ் பல்சர், 2001ல் இருந்து இந்திய மிடில் கிளாஸ் ஆண்களின்
குதிரை என்றால் அது மிகையாகாது. ஏனேன்றால் ஒரு ஸ்போர்ட்ஸ் பைக்கிற்கு தேவையான பவர்,
ஹேண்ட்லிங், சிறப்பம்சங்கள் தவிர மைலேஜ், குறைந்த விலை மற்றும் மெயின்டனென்ஸ் என்று
ஆல்ரவுண்டராக இருந்ததால், விற்பனை எகிறியது. ஆனால் யமஹா FZ மற்றும் பேஸர், ஹோண்டா
யுனிகார்ன், டிவிஎஸ் அப்பாச்சி, ஸுசுகி ஜிக்ஸர் மற்றும் SF என போட்டியாளர்கள் அதிகரிக்க,
விற்பனை இறங்கியது. அதனால் பஜாஜ் 2015ல், ADVENTURE SPORTS ஏனும் புதிய ரக வாகனங்களை
அறிமுகப்படுத்தியுள்ளது. வாருங்கள் அதன் சாதக பாதகங்களை பார்ப்போம்.
டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள்:
2012ல் வெளியான பல்சர் 200NS பைக்கை அடிப்படையாகக் கொண்டு,
பல்சர் 150AS மற்றும் பல்சர் 200AS பைக்குகளை வடிவமைத்துள்ளது பஜாஜ். புதிதாக குவார்ட்டர்
பேரிங் சேர்க்கப்பட்டு, அதில் உயரமான வைசர், புரொஜெக்டர் ஹெட்லாம்ப் மற்றும் LED பார்க்கிங்
லைட்கள் உள்ளன. அதைத் தவிர பெரிய மாற்றங்கள் இல்லையென்றாலும், இவையனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட
விதம் சிறப்பாக உள்ளது. தரமான அலாய் பாகங்கள் எடைக் குறைப்புக்காக
பயன்படுத்தப்பட்டுள்ளது. இரு வாகனத்தின் நிலம், அகலம், உயரம் ஒன்றுதான் . சைட் மிரர், இன்ஜின், அலாய் வில்கள், எக்ஸாஸ்ட் கறுப்பு நிறத்தில் உள்ளன ரியர் வியூ கண்ணாடிகள் பின்னால் வரும் வாகனங்களைத் தெளிவாகக் காட்டுகின்றன.
ஸ்பிளிட் சீட், 2 பீஸ் ஹேண்டில்பாரில் இன்ஜின் கில் சுவிட்ச் உள்ளது. அனலாக் ஆர்பிஎம் மீட்டரோடு டிரிப் மீட்டர், ஸ்பீடோ மீட்டர், ஃப்யூல் மீட்டர், கடிகாரம் டிஜிட்டலில் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஸுசுகி பைக்கில் உள்ளது போன்ற கியர் இண்டிகேட்டர் இல்லை. கைப்பிடிகள், BACKLIT சுவிட்ச்சுகள் தரமாக இருக்கின்றன. இந்த பைக்கின் பில்லியன் சீட் வசதியாக உள்ளது. பின்பக்க டிஸைன், அதுவும் டெயில் லைட் டிஸைன் அப்படியே பல்ஸர் 200NS தான். ஒட்டு மொத்தமாக வாகனத்தின் பெயின்ட், பினிஷ் மற்றும் கட்டுமானத் தரம் சிறப்பாக உள்ளது.
இன்ஜின் பெர்பாமென்ஸ்:
பல்ஸர்
AS200 பைக்கில் இருப்பது, பல்ஸர்
NS200 பைக்கில் இருந்த அதே கார்புரேட்டட்
மற்றும் லிக்விட் கூல்டு இன்ஜினைக்கொண்டுள்ளது.
மேலும் NS200
பைக்கைவிட [145 கிலோ] AS 200 பைக்கின் எடை 8 கிலோ
அதிகம் [153கிலோ]. பவர் 9,500 rpm-ல்
23.52bhp சக்தியை வெளிப்படுத்துகிறது மற்றும்
8,000 ஆர்பிஎம்-ல்
1.83kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது.
ஆனால் பல்ஸர் AS 150ல், புதிய 149.5 சிசி ஏர் கூல்ட் மற்றும் கார்புரேட்டட் இன்ஜின்
பொருத்தப்பட்டுள்ளது. பவர் 9,500 rpm-ல் 17bhp சக்தியை வெளிப்படுத்துகிறது மற்றும்
7,000 ஆர்பிஎம்-ல் 1.3kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. AS
200 பைக்கின் எடையை விட 10கிலோ குறைவு. இரு இன்ஜினில் இருந்து பவர் ஒரே சீராக
ரெஸ்பான்ஸிவாக வெளிப்படுகிறது. மேலும் ஆக்ஸிலரேட்டரை முறுக்கினால்
நல்ல சத்தத்தோடு இன்ஜின் நன்றாக ரெவ் ஆகிறது. லைட்டான கிளட்ச் 6 கியர்களையும் எளிதாக மாற்றுவதற்கு உதவுகிறது. இன்ஜின் ஸ்முத்தாக இயங்குவதால் வைப்ரேஷன் கன்ட்ரோல்
செய்யப்பட்டுள்ளது. பல்ஸர் AS200 பைக்கின் அதிகபட்ச வேகம்
135 கிலோ மிட்டர் மற்றும் பல்ஸர் AS150 பைக்கின் அதிகபட்ச வேகம் 115 கிலோ மிட்டர்.
ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை:
வாகனத்தின் கிரவுண்ட்
கிளியரன்ஸ் 170MM, இன்ஜின் அடிபடாமல் இருக்க உதவுகிறது. சிட்டி டிராபிக் மற்றும் நெடுஞ்சாலையில் வசதியாக பயன்படுத்தும் வகையில் வாகனத்தை வடிவமைத்துள்ளது பஜாஜ். சீட்டிங்
பொசிஷன் ஸ்போர்ட்டியாகவும், தினமும் நகருக்குள் ஓட்டுவதற்கு ஏற்ப கொஞ்சம் உயரமாகவும் இருக்கிறது. 12லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரொல் டேங்க் கால்களுக்கு நல்ல சப்போர்ட் அளிக்கிறது. 17 இன்ச் MRF டியுப்லேஸ்
டயர்கள் போதுமான கிரிப்பை அளிக்கிறது. முன்பக்க டெலிஸ்கோபிக் மற்றும் பின்பக்க நைட்ராக்ஸ் மோனொஷாக் ஸ்பிரிங் சஸ்பென்ஷன் மோசமான சாலைகளிலும் நல்ல ஓட்டுதல் தரத்தையும் நிலைத்ததன்மையும் அளிக்கிறது.
அதிக வேகங்களில் வாகனத்தின் கையாளுமை பழைய பல்ஸரோடு ஒப்பிடும் போது நன்றாக வளைவுகளில் வளைத்து நெளித்து ஓட்டும் வகையில் மேம்பட்டுள்ளது.
AS 200 பைக்கில் முன்பக்கம் 280 மிமீ டிஸ்க் பிரேக்கையும், பின்பக்கம் 230 மிமீ டிஸ்க் பிரேக்கையும் கொண்டுள்ளது மற்றும் AS 150 பைக்கில் முன்பக்கம் 240 மிமீ டிஸ்க் பிரேக்கையும், பின்பக்கம் 130 மிமீ டிரம் பிரேக்கையும் கொண்டுள்ளது. AS 150 பைக்கின் மைனஸ் பிரேக்ஸ் தான். மேலும்
ஏபிஎஸ் பிரேக் ஆப்ஷனாகக் கூட இல்லை.
மைலேஜ் மற்றும் விலை:
நமது சிட்டி டிராபிக்கில் , ஒரு லிட்டர்
பெட்ரோலுக்கு முறையே AS 200 பைக் 35 கிலோ மிட்டர் மற்றும் AS
150 பைக் 45 கிலோ மிட்டர் மைலேஜ் கிடைக்கிறது.
சென்னையில் இவ்வாகனங்களின்
எக்ஸ் ஷோரும் விலை AS 200: ரு. 93,568 மற்றும் AS 150: ரு. 80,794. இதன் முலம் போட்டியாளர்களை விட குறைந்த
விலையில் நல்ல வாகனத்தை தயாரிக்க முடியும் என்று
பஜாஜ் நிருபித்து இருக்கிறது.
No comments:
Post a Comment