Friday, 4 September 2015

2015 பியாஜியோ வெஸ்பா VXL 125 மற்றும் SXL 125




பியாஜியோ வெஸ்பா,  இந்திய ஸ்கூட்டர் சந்தையில் தனக்கென ஒரு புதிய பாதையை 2012ல் உருவாக்கியது. ரெட்ரோ ஸ்டைல், க்ரோம் ஃபினிஷ், டிஜிட்டல் கடிகாரம், 10.06 HP சக்தி வாய்ந்த 3 வால்வு 125 சிசி இன்ஜின், டியுப்லேஸ் டயர்கள் கொண்ட அலாய் வில்கள், மெயின்டனென்ஸ் FREE பேட்டரி, முன்பக்க 200MM டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க 140MM டிரம் பிரேக், மோனோகாக் ஸ்டில் பாடி, 8.5 லிட்டர் பெட்ரோல் டேங்க், DC லைட்ஸ், ஆர்ட் லெதர் சீட்டுகள் அடியில் 21 லிட்டர் கொள்ளளவு இடம் என பல வசதிகளைக் கொண்டிருந்தாலும், அதிக விலை மற்றும் குறைவான டிலர் நெட்வோர்க் போன்ற காரணங்களால் விற்பனை சிறப்பாக இல்லை. தற்போது 2015ல், ஏற்கனவே விற்பனையில் உள்ள வெஸ்பா ஸ்கூட்டரை, மேம்படுத்தியுள்ளது பியாஜியோ.

மாற்றங்கள்:
















முதலில் தெரிவது 6 புதிய கலர்கள் மற்றும் அகலமான முன்பக்க 11 இன்ச் மற்றும் பின்பக்க 10 இன்ச் டியுப்லேஸ் டயர்கள். வெஸ்பா VX மற்றும் S மாடலை அடிப்படையாகக் கொண்டு, VXL 125 மற்றும் SXL 125 வடிவமைத்துள்ளது பியாஜியோ. ஆரஞ்ச் BACKLITல் ஸ்பிடோ மீட்டர், 2 டிரிப் மீட்டர், பியுல் கேஜ், கிளாக் என அனைத்தும் டிஜிட்டலில் தெளிவாக இருப்பது சிறப்பு. முன்பக்க கிரில் டிசைன் மாறியுள்ளது. மேலும் 2 பேர் அமர்வதற்கு ஏற்ற சொகுசான புதிய இருக்கைகள் உள்ளன. இவ்வாகனத்தின் புனே எக்ஸ் ஷோரும் விலை ரு.77,308 மற்றும் ரு.81,967.

மாறாதது:


















ஸ்கூட்டரின் நீள, அகல, உயர அளவுகள் மற்றும் எடையில் மாற்றமில்லாதது நல்ல விஷயம். 95கிலோ மீட்டர் அதிகபட்ச வேகம் மற்றும் 45 கிலோ மீட்டர் மைலேஜ் கொண்ட ஸ்முத்தான 125 சிசி இன்ஜினில், பியுவல் இன்ஜெக்ஷன் டெக்னாலஜி இல்லாதது மைனஸ். ஆனால் ஸ்கூட்டரின் பிரேக்கிங், கையாளுமை, ஒட்டுதல் தரம், நிலைத்ததன்மை, தரம் ஆகியவை நிறைவாக உள்ளது. இந்த விலைக்கு கிளவ் பாக்ஸ், முன்பக்க டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் மற்றும் பிரேக் லாக் கிளாம்ப் இல்லாதது அதிர்ச்சியாக உள்ளது. ஆனால், இன்ஜின் மற்றும் டிசைன் விஷயத்தில் நம்மை ஏமாற்றவில்லை பியாஜியோ.





Thursday, 3 September 2015


ஹோண்டா ஷைன், நமது நாட்டில் அதிகம் விற்பனையாகும் இரு சக்கர வாகனங்களில் 5வது இடம் என்ற செய்தியே, இந்த பைக்கின் வெற்றி வரலாற்றை கூறி விடுகிறது. 2006ல் அறிமுகமான ஷைன், பெயருக்கு ஏற்றபடி கிராபிக்ஸ் மற்றும் கலர்கள் வாயிலாக தன்னை அப்டேட் செய்துள்ளது. தற்போது 2015ல், மேம்படுத்தப்பட்ட வாகனத்தை களமிறக்கியுள்ளது ஹோண்டா.

மாற்றங்கள்:












முதலில் தெரிவது, 4 புதிய கலர்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கிராபிக்ஸ். புதிய ஹெட்லைட் டிசைன், ஹிரோ ஹங்க்கை நினைவுபடுத்துகிறது. புதிய 10.5 லிட்டர் பெட்ரோல் டேங்க் டிசைன் நன்றாக உள்ளது. மெயின்டனென்ஸ் FREE பேட்டரி சேர்க்கப்பட்டுள்ளது சிறப்பு. புதிய பாடி பேனல்கள், பைக்கின் தோற்றத்தை பிரேஷ்ஷாக காட்டுகின்றன. புதிய அலாய் வீல் மற்றும் டெயில் லைட் டிசைன், பைக்கோடு பொருந்துகிறது. புதிய 18 இன்ச் MRF டியுப்லேஸ் டயர்கள், நல்ல கிரிப்பை அளிக்கின்றன. கிராப் ரெயில் பாடி கலருக்கு மாறியுள்ளது. புதிய 5 வகை ADJUSTABLE ஸ்பிரிங் சஸ்பேன்ஷன், நல்ல ஓட்டுதல் தரத்தை அளிக்கிறது. 124.7சிசி சிங்கிள் சிலிண்டர், கார்புரேட்டட் HET இன்ஜின், அதிக பிக்அப் மற்றும் மைலேஜுக்காக டியுன் செய்யப்பட்டுள்ளது. பவர் மற்றும் டார்க் முறையே 10.57HP@7500RPM மற்றும் 10.30NM@5500RPM. இந்த பைக்கின் சென்னை ஆன் ரோடு விலை ரு. 65, 173 தொடங்கி ரு. 71, 547 வரை செல்கிறது. மேலும் கம்பைண்டு பிரேக்கிங் சிஸ்டம் ஆப்ஷனாகக் கொடுக்கப்பட்டள்ளது.

மாறாதது:








பைக்கின் நீள, அகல, உயர அளவுகளில் மாற்றமில்லை. 95 கிலோ மீட்டர் அதிகபட்ச வேகம் மற்றும் 55 கிலோமீட்டர் மைலேஜ் கொண்ட இன்ஜின் ஸ்முத்தாக உள்ளது. பைக்கின் பிரேக்கிங், ஒட்டுதல் தரம், கையாளுமை, நிலைத்ததன்மை மற்றும் தரம் ஆகியவை சிறப்பாக உள்ளன. பைக்கின் சீட்டு, இருவர் வசதியாக அமரும் வகையில் உள்ளது. புதிய அனலாக் மீட்டர்கள் தெளிவாக இருந்தாலும், பினிக்ஸ் போல டிஜிட்டல் மீட்டர்கள் இல்லாதது மைனஸ். 5 ஸ்பிட் கியர்பாக்ஸை சேர்த்திருக்கலாம். விலை அதிகமாகத் தோன்றினாலும், குறைவான மெயின்டனென்ஸ் மற்றும் நல்ல ரீசேல் மதிப்பு என்ற கோட்பாடுக்கு ஏற்ப இவ்வவாகனம் வடிவமைக்கப் பட்டிருப்பதே, பைக்கின் இமாலய வெற்றிக்கு காரணம் என்பதில் மாற்று கருத்தில்லை.


2015 ஹிரோ எக்ஸ்ட்ரிம் ஸ்போர்ட்ஸ்


இந்திய இரு சக்கர வாகன சந்தையானது, பவர்புல் 2 ஸ்ட்ரோக் பைக்குகளில் இருந்து நல்ல மைலேஜ் தரும் 4 ஸ்ட்ரோக் பைக்குகளுக்கு மாறி கொண்டிருந்த காலமது. 1999ல், ஹிரோ ஹோண்டா நிறுவனம்  156.8 சிசி CBZ பைக்கை அறிமுகப்படுத்தியது. சொகுசு, ஸ்டைல், பிக்அப், சிறப்பம்சங்கள், ஹேண்ட்லிங் என போட்டியாளர்களை விட முன்னனியில் இருந்ததால், புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டது. ஆனால் பஜாஜ் பல்ஸர், யமஹா FZ , ஹோண்டா யுனிகார்ன், டிவிஎஸ் அப்பாச்சி, சுசுகி ஜிக்ஸர் என போட்டியாளர்கள் அதிகரிக்க, 2005ல் ஆட்டம் கண்டது CBZ . 2007 முதல் எவ்வுளவு முயற்சித்தும், ஹிரோவால் 100சிசி பைக்குகளால் பெற்ற வெற்றியை, 150சிசி பைக்குகளில் பெற முடியவில்லை. அதனால் 2015ல், ஹிரோ எக்ஸ்ட்ரிம் ஸ்போர்ட்ஸ் என்ற புதிய வாகனத்தை களமிறக்கியுள்ளது. வாருங்கள் அதன் சாதக பாதகங்களை பார்ப்போம்.

டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள்:








முதலில் தெரிவது, ஷார்ப்பான கோடுகள் கொண்ட பைக்கின் டிசைன். புதிய LED பார்க்கிங் லைட்கள் கொண்ட ஹெட்லாம்ப், பார்ப்பதற்கு நன்றாக உள்ளது. மற்றபடி ஃபேண்டர், பெட்ரோல் டேங்க், ஸ்பிளிட் சீட், இன்ஸ்ட்ருமெண்ட், எக்ஸாஸ்ட் என பல பாகங்கள், 2011ல் இருந்த எக்ஸ்ட்ரிம் பைக்கில் இருப்பது போல உள்ளது. பாடி கலரில் உள்ள ரியர் வியூ கண்ணாடிகள் பின்னால் வரும் வாகனங்களைத் தெளிவாகக் காட்டுகின்றன. முழுக்க கவர் செய்யப்பட்டுள்ள செயின், இந்த பைக்கின் தோற்றத்திற்கு செட் ஆகவில்லை. அலாய் வீல்கள், சைட் பேனல்கள் மற்றும் டெயில் லைட் டிஸைன் தற்போதைய எக்ஸ்ட்ரிம் பைக்கில் இருந்து பெறப்பட்டுள்ளது. 2 பீஸ் ஹேண்டில்பாரில் இன்ஜின் கில் சுவிட்ச் இல்லாதது மைனஸ். மேலும் சாவி துவாரம் வலது இண்டிகேட்டர் அருகில் இருப்பது பயன்படுத்த வசதியாக இல்லை. கைப்பிடிகள், சுவிட்ச்சுகள் தரமாக இருக்கின்றன. இந்த பைக்கின் சீட் வசதியாக உள்ளது. ஒட்டு மொத்தமாக வாகனத்தின் பெயின்ட், பினிஷ் மற்றும் கட்டுமானத் தரம் சிறப்பாக உள்ளது.

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்:


ஹிரோ எக்ஸ்ட்ரிம் ஸ்போர்ட்ஸ் பைக்கில் இருப்பது சிங்கிள் சிலிண்டர் மற்றும் கார்புரேட்டர் கொண்ட 149.2 சிசி இன்ஜினைக்கொண்டுள்ளது. பவர் 15.6 bhp சக்தியை 8,500 ஆர்பிஎம்மிலும், 1.35 kgm டார்க்கை 7,000 ஆர்பிஎம்மிலும் அளிக்கிறது. இன்ஜினில் இருந்து பவர் ஒரே சீராக ரெஸ்பான்ஸிவாக வெளிப்படுகிறது. லைட்டான கிளட்ச் 5 கியர்களையும் எளிதாக மாற்றுவதற்கு உதவுகிறது. இன்ஜின் ஸ்முத்தாக இயங்குவதால் ஒரளவிற்கு வைப்ரேஷன் கன்ட்ரோல் செய்யப்பட்டுள்ளது. ஹிரோ எக்ஸ்ட்ரிம் ஸ்போர்ட்ஸ் பைக்கின் அதிகபட்ச வேகம் 115 கிலோ மிட்டர். மேலும் வாகனத்தின் கிரவுண்ட்  கிளியரன்ஸ் 163MM, இன்ஜின் அடிபடாமல் இருக்க உதவுகிறது.

ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை:





சிட்டி டிராபிக் மற்றும் நெடுஞ்சாலையில் வசதியாக பயன்படுத்தும் வகையில் வாகனத்தை வடிவமைத்துள்ளது ஹிரோ. சீட்டிங் பொசிஷன் கொஞ்சம் ஸ்போர்ட்டியாகவும், தினமும் நகருக்குள் ஓட்டுவதற்கு ஏற்ப உயரமாகவும் இருக்கிறது. 12லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரொல் டேங்க் கால்களுக்கு நல்ல சப்போர்ட் அளிக்கிறது. அதிக வேகங்களில் வாகனத்தின் கையாளுமை நன்றாக இருக்கிறது. 18 இன்ச் MRF டியுப்லேஸ் டயர்கள் போதுமான கிரிப்பை அளிக்கிறது. முன்பக்க டெலிஸ்கோபிக் மற்றும் பின்பக்க கேஸ் ஸ்பிரிங் சஸ்பென்ஷன் மோசமான சாலைகளிலும் நல்ல ஓட்டுதல் தரத்தையும் நிலைத்ததன்மையும் அளிக்கிறது. ஹிரோ எக்ஸ்ட்ரிம் ஸ்போர்ட்ஸ் பைக்கில் முன்பக்கம் 240 மிமீ டிஸ்க் பிரேக்கையும், பின்பக்கம் 130 மிமீ டிரம் பிரேக்கையும் கொண்டுள்ளது. ஆனால் ஆப்ஷனாகக் கொடுக்கப்பட்டள்ள பின்பக்க 220 மிமீ டிஸ்க் பிரேக் நம்பிக்கையை அளிக்கிறது. வாகனத்தின் அதிக எடை [147கிலோ] வளைத்து நெளித்து ஓட்டுவதற்கு இடைஞ்சலாக இருக்கிறது.

மைலேஜ் மற்றும் விலை:










நமது சிட்டி டிராபிக்கில் , ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 45 கிலோ மிட்டர் மைலேஜ் கிடைக்கிறது. சென்னையில் இவ்வாகனத்தின் எக்ஸ் ஷோரும் விலை ரு. 71, 629 மற்றும் பின்பக்க டிஸ்க் பிரேக் கொண்ட பைக்கின் எக்ஸ் ஷோரும் விலை ரு. 74, 829. இந்த விலைக்கு புதிய ஹிரோ எக்ஸ்ட்ரிம் ஸ்போர்ட்ஸ் பைக், நகருக்குள் தினமும் ஓட்டுவதற்கு ஏற்ப பிராக்ட்டிக்கல் பைக்காக இருக்கிறது. ஆனால் போட்டியாளர்கள் போலஅப்டேட்டாக இல்லை என்பதே இதன் மைனஸ். மேலும் பெயருக்கேற்றபடி ஸ்போர்ட்டியாக இல்லை.



Wednesday, 2 September 2015

2015 சுசுகி ஸ்விஷ்


ஸ்கூட்டர் என்பது நடுத்தர வயது பெண்கள் மற்றும் ஆண்களை மனதில் வைத்து தயாரிக்கப்பட்டவை. ஆனால் இளம் வயதினரும் தற்போது அதிகளவில் ஸ்கூட்டரை உபயோகிப்பதால் ஹோண்டா டியோ மற்றும் ஆக்டிவா ஐ, மஹிந்திரா ரோடியோ, டிவிஎஸ் ஸ்கூட்டி மற்றும் விகோ, யமஹா ஃபாஸினோ மற்றும் ரே, ஹிரோ பிளஷர், சுசுகி லேட்ஸ், பியாஜியோ வெஸ்பா போன்ற வாகனங்கள் களம் கண்டன. தற்போது 2015ல், ஏற்கனவே விற்பனையில் உள்ள ஸ்விஷ் ஸ்கூட்டரை, மேம்படுத்தியுள்ளது சுசுகி.


மாற்றங்கள்:









முதலில் தெரிவது 4 புதிய கலர்கள் மற்றும் கிராபிக்ஸ். புதிய 10 இன்ச் MRF டியுப்லேஸ் டயர்கள் போதுமான கிரிப்பை அளிக்கின்றன. மெயின்டனென்ஸ் FREE பேட்டரி சேர்க்கப்பட்டுள்ளது சிறப்பு. ஆரஞ்ச் BACKLITல் ஸ்பிடோ மீட்டர், 2 டிரிப் மீட்டர், பியுல் கேஜ், கிளாக் என அனைத்தும் டிஜிட்டலில் தெளிவாக இருப்பது சிறப்பு. BLUE பார்க்கிங் லேம்ப் கொண்ட DC ஹெட்லைட் நல்ல வெளிச்சம் தருகிறது. முன்பக்க STEEL ஃபேண்டர், தரமாக உள்ளது. இந்த ஸ்கூட்டரின் சென்னை ஆன் ரோடு விலை ரு. 62, 705.


மாறாதது:











ஸ்கூட்டரின் நீள, அகல, உயர அளவுகள் மற்றும் எடையில் மாற்றமில்லாதது நல்ல விஷயம். 90கிலோ மீட்டர் அதிகபட்ச வேகம் மற்றும் 45 கிலோ மீட்டர் மைலேஜ் கொண்ட ஸ்முத்தான 124 சிசி இன்ஜினில், SEP டெக்னாலஜி இல்லாதது மைனஸ். மேலும் அலாய் வில்கள் மற்றும் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் இல்லை. ஆனால் ஸ்கூட்டரின் பிரேக்கிங், கையாளுமை, ஒட்டுதல் தரம், நிலைத்ததன்மை, தரம் ஆகியவை நிறைவாக உள்ளது. கிளவ் பாக்ஸ் இல்லாதது அதிர்ச்சியாக உள்ளது. மேற்கண்ட ஸ்கூட்டரை பார்த்து சலித்தவர்களுக்கு, இந்த ஸ்கூட்டர் மாற்றாக அமையும் என்பதே உண்மை. ஏனேன்றால், 2 பேர் அமர்வதற்கு ஏற்ற சொகுசான இருக்கைகள், 160MM கிரவுண்ட் கிளியரன்ஸ், ஹெல்மெட் ஒன்றை வைத்துக்கொள்ளக் கூடிய அளவுக்கு 20 லிட்டர் கொள்ளளவு இடவசதி, மிட் ரேஞ்ச் இன்ஜின் பெர்பாமென்ஸ், முன்பக்க டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன், 6 லிட்டர் பெட்ரோல் டேங்க், கால்கள் வைப்பதற்கு நிறைய இடம் என பிராக்டிக்கலான வாகனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.